Kondaikadalai Keerai Poriyal Recipe: சத்தான கொண்டைக்கடலை கீரை பொரியல் எப்படி செய்வது..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

சுவையான முறையில் கொண்டைக்கடலை கீரை பொரியல் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Kondaikadalai Keerai Poriyal (Photo Credit: YouTube)

செப்டம்பர் 10, சென்னை (Kitchen Tips): ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். அந்தவகையில், கொண்டைக்கடலை (Chickpea) மற்றும் கீரை (Spinach) பயன்படுத்தி சத்தான பொரியல் செய்து கொடுத்தால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவர். மேலும், இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட கொண்டைக்கடலை கீரை பொரியலை (Kondaikadalai Keerai Poriyal) அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கொண்டைக் கடலை - 3 கைப்பிடி

கீரை - 3 கொத்து

பூண்டு - 5 பல்

சின்ன வெங்காயம் - 3

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு. Coconut Buttermilk Solution: தாவரங்கள் பூக்கும் தன்மையை அதிகப்படுத்தும் இளநீர் மோர் கரைசல்.. தயாரிப்பது எப்படி?!

தாளிக்க தேவையானவை:

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

  • முதலில், முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை ஊற வைக்கவும். இப்பொழுது, அதை நன்றாகக் கழுவி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
  • வெந்ததும் அந்த நீரை வடித்து வைக்கவும். அடுத்து வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையைத் தண்ணீரில் அலசி நறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றி சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • இரண்டும் நன்றாக வதங்கியதும் கொண்டைக்கடலையைப் போட்டு வதக்கவும். பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி லேசாகத் தண்ணீரைத் தெளித்து மூடி மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • கொஞ்ச நேரத்தில் கொண்டைக்கடலையும் மிளகாய்த் தூளும் நன்றாகக் கலந்திருக்கும். அப்போது, கீரையைப் போட்டுக் கிளறி மூடி போடாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான கொண்டைக்கடலை கீரை பொரியல் ரெடி. இது சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement