செப்டம்பர் 09, சென்னை (Chennai): இளநீர் மோர் (Coconut Buttermilk) கரைசலானது தாவர வளர்ச்சியை அதிகரித்து, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. பயிரில் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும் பூக்கும் திறன் அதிகரித்து மகசூலை அதிகப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்:
மோர் - 5 லிட்டர்
இளநீர் - 1 லிட்டர்
தேங்காய் 1-2
பழக் கழிவுகளிலிருந்து பெறப்படும் சாறு - 500 மிலி முதல் 1 லிட்டர் Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!
தயாரிப்பு:
ஒரு வாளியில் இளநீர் ஊற்ற வேண்டும். இதனுடன் மோர், பழக் கழிவுச் சாற்றைச் சேர்க்க வேண்டும். பின், தேங்காய் துண்டுகளை எடுத்து துணியில் கட்டி, கலந்து வைத்த கரைசலில் மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும். ஏழு நாட்கள் பிறகு இந்த கரைசல் நன்கு புளித்து விடும். தேங்காய் துண்டை அவ்வப்போது மாற்றிக் கொள்ளலாம்.
பயன்பாடு:
இந்த தயாரிக்கப்பட்ட கரைசலில், 300 - 500 மில்லியை, பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு 5 - 10 லிட்டர் என்ற அளவில் பாசன நீரிலும் கலந்து பயன்படுத்தலாம்.