Cockroach Dosa in Madras Cafe: சுடச்சுட வழங்கப்பட்ட தோசையில், மொறுவலாக கிடந்த 8 கரப்பான் பூச்சிகள்: பெண்ணை பதறவைத்த டெல்லி மெட்ராஸ் மெட்ராஸ் கபே..!

எட்டு கரப்பான் பூச்சியுடன் சுடச்சுட தோசை சுட்டு சாப்பிடுவதற்கு பரிமாறப்பட்ட சம்பவம் டெல்லியில் உள்ள மெட்ராஸ் கபே ரெஸ்டாரண்டில் நடந்துள்ளது.

Cockroach In Dosa (Photo Credit: Instagram)

மார்ச் 18, டெல்லி (Delhi): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாரம்பரியமான மற்றும் மாநிலங்களை பிரதிபலிக்கும் வகையிலான பெயர்கள் கொண்ட உணவகங்கள் பிரதானமாக செயல்படுவது உண்டு. அந்த வகையில், டெல்லியில் காண்ட் பிளேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் கபே என்ற உணவகத்திற்கு கடந்த மார்ச் 7ஆம் தேதி இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன் சென்றுள்ளார்.

தோசையுடன் கரப்பான்பூச்சி: அங்கு இருவரும் சாப்பிட தோசை ஆர்டர் செய்துள்ளனர். உணவகத்தின் சார்பில் தோசையும் பரிமாறப்பட்ட நிலையில், அதில் எட்டு கரப்பான் பூச்சிகள் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இந்த கரப்பான் பூச்சிகள் அனைத்தும் தோசையுடன் சேர்த்து முறுவலாக சமைக்கப்பட்டு சாப்பிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேள்விக்குறியாகும் உணவின் தரம்: இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, கரப்பான் பூச்சிகளை எண்ணியவாறு அதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார்‌. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மெட்ராஸ் கபேவின் தரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவு: 

 

View this post on Instagram

 

A post shared by Ishani (@ishanigram)

செய்தி நிறுவனத்தின் பதிவு: 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement