Delhi Red Fort Blast (Photo Credit : @AdityaRajKaul X)

நவம்பர் 12, டெல்லி (Delhi News): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று முன் தினம் மாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து (Red Fort Car Explosion) சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் போது கார் வெடிப்பு சம்பவமானது தற்கொலை படை தாக்குதல் என உறுதி செய்யப்பட்டதால் ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். Pakistan Blast: இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு.. 12 பேர் உடல் சிதறி மரணம்.. இந்தியா மீது பழி.!

மருத்துவர்கள் கைது:

அப்போது பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்த மூன்று மருத்துவர்கள் உட்பட எட்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை முகாமாக பயன்படுத்தி சதி செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைதான மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பரிதாபாத்தில் காஷ்மீர் போலீசார் சோதனை நடத்தியதில் 2900 கிலோ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய மருத்துவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டது.

கார் வெடிப்பு சதித்திட்டம்:

கார் வெடிப்பு விசாரணையின் போது அதிகாரிகளே அதிரும் சில உண்மைகளும் வெளிவந்தன. அதன்படி, 36 வயதான மருத்துவர் உமர் முகமது ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஹூண்டாய் ஐ20 கார் மூலம் ஹரியானாவில் இருந்து டெல்லிக்குள் நுழைந்து வெடிக்க வைத்துள்ளார். இவர்கள் தங்கியுள்ள இடங்களை சோதித்த போது வெடிபொருட்களுடன் சுமார் 20 டைமர்கள், ஏகே 47 ரக துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை படை தாக்குதலில் மருத்துவர்கள் உமர், அதில் முகமது, முஜமில் ஷாகில் ஷாகீன் ஷாகீத், அகமது முகைதீன் இணைந்து ஹரியானா, உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களில் சதி செயல்களை அரங்கேற்ற சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு துணை போன மற்றொரு நாடு?

இந்த சதி செயலுக்காக மொத்தமாக மூன்று கார்களை உபயோகித்த நிலையில், மீதமுள்ள இரண்டு கார்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மருத்துவருக்கு காரை விற்றவர் கைதானதை தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீதமுள்ள இரண்டு கார்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் என்ஐஏ வின் விசாரணையில் பாகிஸ்தானின் கருத்துக்களுக்கு ஒத்துழைத்த துருக்கி நாடு சதிச்செயலுக்கு மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் வைத்து திட்டம் தீட்டி இந்த சதி செயல்களை அரங்கேற்ற முடிவெடுக்கப்பட்டதாக சில ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய புதிய சிசிடிவி வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டெல்லி கார் வெடிப்பு தொடர்பான சிசிடிவி வீடியோ: