Good Friday 2025: புனித வெள்ளி 2025; நம் பாவங்களை போக்க மரித்த இயேசு.. தேதி, முக்கியத்துவம் என்ன..?

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற புனித வெள்ளி குறித்து இப்பதிவில் காண்போம்.

Good Friday 2025: புனித வெள்ளி 2025; நம் பாவங்களை போக்க மரித்த இயேசு.. தேதி, முக்கியத்துவம் என்ன..?
Good Friday 2025 (Photo Credit: Team LatestLY)

ஏப்ரல் 17, சென்னை (Festival News): உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 'புனித வெள்ளி' (Good Friday) கடைபிடிக்கப்படுகிறது. இயேசு இறந்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை 'ஈஸ்டர்' தினமாகவும் கொண்டாடி வருகிறார்கள். புனித வெள்ளி என்பது துக்க நாளாகவே அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகத்தை நினைவுப்படுத்தி, பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவின் சிறந்த போதனைகள் அவர் விட்டுச்சென்ற மரபுகளை நினைவு கூறுகின்றன. Tamil Puthandu Wishes 2025: தமிழ் புத்தாண்டு 2025: பொங்கல் வைத்து வழிபட நல்லநேரம் எப்போது? வாழ்த்துச் செய்தி இதோ.!

புனித வெள்ளி தேதி:

2025ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அன்று, புனித வெள்ளி (Punitha Velli 2025)அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை இது குறிக்கிறது. இயேசுவின் அன்பு, கருணை, மன்னிப்பு போன்றவற்றை வலியுறுத்துகின்றனர்.

புனித வெள்ளி வாழ்த்து செய்தி:

நம் பாவங்களை போக்க

இயேசு மரித்த நாள் இன்று

புனித வெள்ளி வாழ்த்துக்கள்..!

Good Friday Wishes 1 (Photo Credit: Team LatestLY)

தன்னை மறந்து பிறர் நலனுக்காக

தியாகம் செய்யும் போது

நாமும் இயேசுவின் பாதையில் நடக்கிறோம்

புனித வெள்ளி வாழ்த்துக்கள்..!

Good Friday Wishes 2 (Photo Credit: Team LatestLY)

இயேசுவின் உயிர் தியாகம்

எப்போதும் நம் வாழ்க்கையை ஒளிர செய்யும்

புனித வெள்ளி வாழ்த்துக்கள்..!

Good Friday Wishes 3 (Photo Credit: Team LatestLY)

புனித வெள்ளி:

இயேசு கிறிஸ்து மனித குலத்தின் பாவங்களை மன்னிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டார். புனித வெள்ளிக்கிழமையின் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். ஏனெனில், இது ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையின் தேதியால் தீர்மானிக்கப்படுகிறது. கிறிஸ்தவ நாட்காட்டியின்படி, புனித வெள்ளி இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், அவர் மனிதகுலத்தின் மீது வைத்திருந்த அன்பையும் நினைவூட்டுகிறது. இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நினைவு கூர்ந்து, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை போதித்து, எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).