ஏப்ரல் 13, சென்னை (Chennai): உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் தமிழ்ப்புத்தாண்டு 2025 (Tamil Puthandu 2025) நாளை (ஏப்ரல் 14, 2025) கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் தொடக்கம் பங்குனி உத்திரத்துக்குப்பின் திருவிழா போல கொண்டாடப்படும் என்பதால், தமிழர்கள் பலரும் தங்களின் வீடுகளை சுத்தம் செய்து தமிழ்ப் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு நன்னாளில் ஒவ்வொருவரும் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, புத்தாடை உடுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபடலாம். வீட்டில் குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம். வீட்டின் அருகில் உள்ள கோவில் மற்றும் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குடும்பத்துடன் வழிபாடு நடத்தி அருளை பெறலாம். Tamil Puthandu 2025: 2025 தமிழ் புத்தாண்டை எப்படி சிறப்பிக்கலாம்? அசத்தல் வாழ்த்துச் செய்தி.. உங்களுக்கான டிப்ஸ் இதோ.!
தமிழ் புத்தாண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் (Tamil Puthandu Good Time):
நாளை வீட்டில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட நல்ல நேரமாக காலை 06:30 மணிமுதல் 07:30 வரை, மாலை 04:30 மணிமுதல் 05:30 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. வீட்டில் மாவிலை தோரணம் கட்டி மா, பலா, வாழையில் உணவு சமைத்து இறைவழிபாடு செய்வது எதிர்வரும் ஆண்டை வெற்றிகரமாக எடுத்துச்செல்ல உதவும் என்பது ஆன்மீக பக்தர்களின் நம்பிக்கை என்பதால், நாளைய நாளை தவறவிடாதீர்கள். ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டைபோலவும், தமிழ் புத்தாண்டை நமது பரம்பரியபடி கொண்டாடுவது நமது சந்ததிக்கும் அக்கொண்டாட்டத்தை கொண்டு சேர்க்க வழிவகை செய்யும். இந்த நாளில் வாழ்த்து வாட்சப், பேஸ்புக்கில் வாழ்த்து மடல் அனுப்ப விரும்புவோரின் வசதிக்காக லேட்டஸ்ட்லி தனது வாழ்த்துக்களையும் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளது. Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு 2025.. தேதி என்ன? என்ன செய்யலாம்? விபரம்., வாழ்த்துச் செய்தி இதோ.!
1. வாசகர்களாகிய நீங்கள் மென்மேலும் உங்களின் வாசிப்பை வளர்த்து, தொடர்ந்து ஆதரவை வழங்கிட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

2. இவ்வாழ்த்துக்களை உங்களின் நண்பர்களுக்கும் பகிர்ந்து, தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க எமது லேட்டஸ்ட் லி தமிழ் சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

3. எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

4. இந்த வருட புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவரவாழ்த்துகிறேன், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

5. நலமும் வளமும் தழைக்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

6. இன்னல்கள் நீங்கி புத்துணர்வு மேலோங்கி வளர்க, இப்புத்தாண்டில் வாழ்த்துகின்றேன்.

7. தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் லேட்டஸ்ட்லி தமிழ் தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.

Tamil New Year 2025 Images & Puthandu Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varusha Pirappu