Today Rasi Palan (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, சென்னை (Chennai News): இந்தியாவில் உள்ள மக்களால் பெரிதும் கவனிக்கப்படும் ராசிபலன், அன்றைய நாளை சிறப்பாக எடுத்துச்செல்லவும், கவனமுடன் செயல்படவும் உதவுகிறது. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் புதிய சிந்தனை, ஆற்றலுடன் தொடங்கி செயல்படுத்த நமது ராசியின் பலன் மிகப்பெரிய பங்கினை கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான ராசிபலன் (Today Rasi Palan Tamil), குறித்த தகவலை எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tami) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம் ராசி பலன் இன்று (Mesham Rasi Palan Today):

எதிர்பார்த்திருந்த பணிகள் நிறைவாகும். உடன் பிறந்தோர் ஒத்துழைப்பு அதிகமாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கும். செய்யும் முயற்சி முன்னேற்றத்தை வழங்கும். சேமிப்பு சிந்தனைகள் மேலோங்கும். தொழில் நிமித்தமான முடிவுகள் எடுக்கப்படும். சமூக பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். குழம்பும் மறையும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் ஊதா.

ரிஷபம் ராசி பலன் இன்று (Rishabam Rasi Palan Today):

தொழில் விஷயத்தில் புதிய வாய்ப்புகள் மூலமாக இலாபம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனை குறையும். எதிர்பாராத பயணங்கள் வாயிலாக அனுபவம் கிடைக்கும். நெருக்கமான நபர்களிடம் இருந்த வேறுபாடு குறைக்கும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான சிந்தனை உண்டாகும். சமூக பணியில் இருப்போருக்கு சாதகமான நிலை உண்டாகும். யர்கல்வி குறித்த குழப்பங்கள் விலகும் நற்செயல் நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளம் மஞ்சள்.

மிதுனம் ராசி பலன் இன்று (Mitunam Rasi Palan Today):

உடன் வேலைபார்க்கும் நபர்களின் ஒத்துழைப்பு மனதை திருப்தியடைய செய்யும். மாணாக்கர்களுக்கு முன்னேற்றம், வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம்விட்டு பேசி தெளிவான நிலை எடுக்க வாய்ப்புக் நடக்கும். எதையும் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படும். இணையம், வர்த்தக பணிகளில் இலாபம் கிடைக்கும். சுபகாரியத்தில் முன்னேற்றம் இருக்கும். மாற்றம் நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் மஞ்சள். Underrated Music Directors: லியோன் ஜேம்ஸ் முதல் கோவிந்த் வசந்தா வரை.. இசையில் குறைப்பு மதிப்பிடப்படுவர்கள்.. லிஸ்ட் இதோ.! 

கடகம் ராசி பலன் இன்று (Kadagam Rasi Palan Today):

ஒருசில காரியங்களில் எதிர்பார்த்த பலன் தாமதமாக கிடைக்கும். கணவன் - மனைவிக்கு இடையே அனுசரிப்பு நல்லது. அரசு பணிகளில் பொறுமை முக்கியம். அலைச்சலால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். விலையுயர்ந்த பொருளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். செலவின் தன்மையை அறிந்து செயல்பட வேண்டும். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தேர்ச்சி நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் அடர் மஞ்சள்.

சிம்மம் ராசி பலன் இன்று (Simmam Rasi Palan Today):

சுபகாரிய விஷயங்களில் செலவு உண்டாகும். மனது உறுத்தும் விஷயங்கள் சரியாகி தெளிவான சிந்தனை உண்டாகும். கோபத்தை குறைப்பது நல்லது. நெருக்கமானவர்களின் மகிழ்ச்சியான தருணம் கிடைக்கும். மனத்தால் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழலாம். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகத்தை தரும். உதவி கிடைக்கும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் காவி.

கன்னி ராசி பலன் இன்று (Kannai Rasi Palan Today):

புதிதாக மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்பார்த்த முடிவு கைகூடும். இடமாற்றம் சத்தமாக அமையும். மனதுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைக்கும். மனை, வீடு சார்ந்த விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வீட்டின் தேவையை அறிந்து நிறைவேற்றும் சூழல் உண்டாகும். வேலையாட்களின் மாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். மனதில் எதனையும் சமாளிக்கலாம் என்ற தன்னம்பிக்கை மேலோங்கும். கட்டாயம் அமைதி வேண்டிய நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் பொன்.

துலாம் ராசி பலன் இன்று (Thulam Rasi Palan Today):

வருவாயை பற்றி சிந்திக்கும் எண்ணம் மேலோங்கும். மின்சாதன பொருட்களை வாங்க ஆர்வம் உண்டாகும். உறவினரின் சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி நடக்கும். குழந்தைகள் குடும்ப நிலையை அறிந்து செயல்படுவர். பயன் இல்லாத செலவுகளை குறைந்து சேமிப்பு மேம்படும். மறதி விலகும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் ஆரஞ்சு.

விருச்சகம் ராசி பலன் இன்று (Viruchagam Rasi Palan Today):

பணிகளில் மின்னேற்றம் உண்டாகும். அரசு அனுகூல சூழ்நிலையை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான புதிய சிந்தனை உண்டாகும். அக்கம்-பக்கத்தில் ஆதரவு கிடைக்கும். இடமாற்ற சிந்தனை தோன்றும். பழைய நினை மேம்படும். அம்மாவின் உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகும். ஓய்வு நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் அடர் மஞ்சள். Thai Amavasai 2025: தை அமாவாசை 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் அலைமோதும் கூட்டம்..! 

தனுசு ராசி பலன் இன்று (Dhanush Rasi Palan Today):

பாகப்பிரிவினையில் எடுத்த முயற்சிகளுக்கு தீர்வு உண்டாகும். பிரபலமான நபரின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்த நபர்கள் ஆதரவுடன் இருப்பர். வியாபார விஷயத்தில் இழுபறி பணிகள் முடிக்கப்படும். குடும்ப உறுப்பினரிடம் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் கருத்துக்கு மதிப்பு மேலோங்கும். விளையாட்டு விஷயத்தில் ஆர்வம் படும். துன்பம் மறையக்கூடிய நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளம் சிகப்பு.

மகரம் ராசி பலன் இன்று (Makaram Rasi Palan Today):

விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழலாம். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்பு உண்டாகும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழலாம். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சனை கட்டுப்படும். தங்கம் உட்பட பொருள் சேர்க்கை எண்ணம் ஏற்படும். கல்விப்பணியில் மேன்மை கிடைக்கும். போட்டி நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் சந்தானம்.

கும்பம் ராசி பலன் இன்று (Kumbham Rasi Palan Today):

பணியிடங்கள் ரீதியாக மேற்கொள்ளப்படும் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். மறதி பிரச்சனைகள் மறையும். மனதுக்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழலாம். எளிதாக முடிந்துவிடும் என நினைத்த விஷயம் இழுபறிக்கு சென்று நிறைவாகும். உடல் ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனம் தேவை. சுகமான நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளம் சிகப்பு.

மீனம் ராசி பலன் இன்று (Meenam Rasi Palan Today):

உடன் இருக்கும் நபர்களிடம் விவாதம் தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பம் தெரிந்து நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பயணத்தால் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணம் மேலோங்கும். பிரிந்து சென்ற நபர்கள் குறித்து நினைவுகள் வந்து மந்தமான நிலை ஏற்படும். ஆன்மீக பணிகளில் இயல்பாக ஆர்வம் உண்டாகும். இன்பம் கொண்ட நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் சிவப்பு.

30 ஜனவரி 2025 இன்றைய பஞ்சாங்கம் (Today Panchangam):

நல்ல நேரம் (Today Nalla Neram): காலை 10:30 முதல் 11:00 வரை

கௌரி நல்ல நேரம் (Gowri Nalla Neram) காலை: 11:30 முதல் 12:00 வரை

கௌரி நல்ல நேரம்: மாலை 06:30 முதல் 07:30 வரை

ராகு காலம்: நண்பகல் 01:30 முதல் 03:00 வரை

குளிகை காலம்: காலை 09:00 முதல் 10:30 வரை

எமகண்டம் காலம் (Today Yamagandam Timing): காலை 06:00 முதல் 07:30 வரை