Lemon Ginger Drink: உடல் எடையை குறைக்க நினைக்கிறீங்களா?.. கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இஞ்சி-எலுமிச்சை நீர்.!
எடை குறைப்பு தொடர்பான விஷயத்தில் ஈடுபட்டுள்ளார், தினமும் இஞ்சி - எலுமிச்சை பானத்தை தயாரித்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
மார்ச் 03, சென்னை (Health Tips): தற்போதைய இளம் தலைமுறையிடையே உடல் பருமன் சார்ந்த விஷயம் என்பது, பொதுவான சாதாரண பிரச்சனையாக மாறி இருக்கிறது. இதனால் உடல் எடையினை குறைக்க விரும்பும் பலரும், எடை இழப்பு தொடர்பாக கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது தொப்பையை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் இருப்பினும், தினமும் காலையில் நாம் அதனை கட்டுப்படுத்த தொடங்கிவிட்டால், விரைந்து உடல் எடை குறையும். தொப்பை பிரச்சனை சரியாகும்.
வயிறு நிரம்பிய உணர்வு: உடல் எடையை குறைக்க விரும்புவோர், இஞ்சி-எலுமிச்சை நீரை குடித்தால் நல்ல முன்னேற்றம் தென்படும். இஞ்சி-எலுமிச்சை இயற்கையாக உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. இதனை வெறும்வயிற்றில் எடுப்பது, வயிற்றுப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்புகளை குறைக்க உதவி செய்கிறது. இது வயிறு நிரம்பிய உணர்வையும் வழங்குவதால், உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பசியை கட்டுப்படுத்தி, நமது உடல் தேவையற்ற கலோரிகளை எடுப்பதில் இருந்து தடுக்கிறது. Varalaxmi Engaged: விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பிரபல தமிழ் நடிகை; நிச்சயம் முடிந்தது.!
செரிமானம் ஊக்குவிப்பு: இந்நீர் உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. அஜீரணம், வயிறு உப்பிசம், மலச்சிக்கல் போன்ற செரிமான விவகாரத்திலும் திறம்பட செயல்பட்டு, செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கல்லீரல், சிறுநீரகம், குடல் பகுதிகளில் தேங்கி இருக்கும் கொழுப்புகள் மட்டுமல்லாது நச்சுக்களையும் இஞ்சி - எலுமிச்சை நீர் வெளியேற்றுகிறது.
ஒருமாதத்தில் நல்ல பலன்: இஞ்சியில் காணப்படும் அலர்ஜி எதிர்ப்பு பண்பு, வீக்கத்தினை கட்டுப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடலுக்கு ஆற்றல் எழுச்சியை வழங்கி, உடல் சோர்வை நீக்கும். இஞ்சி - எலுமிச்சை நீரை ஒருமாதம் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை கட்டுப்படும்.
குடல் புண் உடையோர் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் இம்முறையை மேற்கொள்வது நல்லது.
(The above story first appeared on LatestLY on Mar 03, 2024 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

