மார்ச் 03, மும்பை (Cinema News): தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் வருணிக்கப்பட்டு வந்த நடிகர் சரத் குமார் - சாயா சரத் குமார் தம்பதியின் மகள் வரலட்சுமி சரத் குமார் (Varalaxmi Sarathkumar). இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படம் வாயிலாக தனது திரையுலக பயணத்தை தொடங்கி இருந்தார். தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
அடையாளத்தை தந்த தாரை தப்பட்டை: கடந்த 2003ம் ஆண்டு வெளியான சங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்க தேர்வான நடிகை ஒருசில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். காதல், வெங்கட் பிரபுவின் சரோஜா ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது கைகூடவில்லை. ஒருசில படங்களில் நடித்து வந்தாலும், இவருக்கென அடையாளத்தை பெற்றுத்தந்தது 2016ல் வெளியான பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படம். இப்படம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. Lightning Strikes 6 Died: பள்ளிக்கு சென்றுவந்த மாணவிகள் முதல், விவசாய பணியாளர்களால் வரை.. மின்னல் தாக்கி ஒரேநாளில் 6 பேர் பலி..!
தொழிலதிபருடன் காதல்: இதற்குப்பின் விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, யசோதா ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. கடந்த சில வருடங்களில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும், மேற்கூறிய சில படங்களே வெற்றியை அடைந்தது. மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நடிகை வரலட்சுமி, தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்தார்.
எளிமையான முறையில் நிச்சயம்: இவர்களின் காதலுக்கு வீட்டில் பெற்றோரின் சம்மதமும் கிடைக்கப்பெற, நேற்று எளிமையான முறையில் பெற்றோர்-உறவினர்கள் முன்னிலையில் தம்பதிகள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.