செப்டம்பர் 14, சென்னை (Health Tips): வளர்ந்துவரும் நாடுகளில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை. பிறநாட்டு உணவுகள் மீதான மோகம், கலாச்சார மாற்றம், கொள்ளை இலாபம் என உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவுகளாலும் தற்போது பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட தொடங்கிவிட்டன.
புதிதாக பரவும் நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஒருபக்கம் செயல்பட, மற்றொரு பக்கம் உலக அரசியலில் பயோ போர் எச்சரிக்கை வேறு மக்களை அச்சுறுத்துகிறது. பொதுவாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எப்போதும் மருந்துகளை எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்வார்கள்.
மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள் எலிகளின் மீது முதலில் செலுத்தப்பட்டு பக்கவிளைவுகள் சோதிக்கப்படும். அவை தொடர்பான பல்வேறு ஆய்வுகள் நடந்து முடிந்த பின்னர்தான் மருந்துகள் சோதனை நிறைவடைந்து விற்பனைக்கு வரும்.
சர்வதேச அளவில் ஏற்படும் சர்க்கரை நோய் பிரச்சனையின் காரணியை அறிந்து தடுக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். மருத்துவர்கள் தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை கூறுகின்றனர். உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை உதாரணமாக சொல்லப்படுகின்றன. Love Ends Rape after Proposal: காதலை கூறிய அன்றே கட்டிலில் தனிமை; காதலியை கழட்டிவிட்டு ஓடிய காதலன்; குமுறும் இளம்பெண்.!
இன்றளவில் மைதாவினால் தயாரிக்கப்படும் உணவுகள் தாராளமாகிவிட்டன. சாலையோர உணவகங்களில் நம்மை சுண்டியிழுக்கும் பரோட்டா அதில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமாக மைதா என விவரிக்கின்றனர் மருத்துவர்கள்.
மைதாவில் இருந்து தயாராகும் உணவுப்பொருட்களில் இருந்து சர்க்கரை நோய் உண்டாகியது உறுதியாகியுள்ளது. எலிகளுக்கு மருந்துகளை கொடுத்து சோதித்த மருத்துவ நிறுவனங்கள், அலாக்ஸ்சாம் என்ற ஊசியை எலிக்கு செலுத்தி சர்க்கரை நோயை வரவழைக்கின்றனர்.
ஊசி செலுத்தப்பட்ட ஒரேநாளில் எலி சர்க்கரை நோய்க்கு உள்ளாகிறது. இந்த ஊசியை தயாரிக்க பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்து காணப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் பரோட்டா பிரியர்கள் ஏராளம்.
பரோட்டாவின் இன்று வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பீஸ் பரோட்டா, சிக்கன் பரோட்டா, கிளி பரோட்டா, பண் பரோட்டா, எண்ணெய் குளியல் பரோட்டா என நாவூறும் வகையில் விதவிதமாக தயாரிக்கப்படுகின்றன. இதனை நாமும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டு செல்கிறோம்.
மைதா உடலுக்கு கேடானது என பரவலாக கூறப்பட்டாலும், அது சர்க்கரை நோய்க்கு மூலகாரணியை கொண்டுள்ளது என்பது பலரும் தெரிவிக்காத விஷயம் ஆகும். இவ்வகை உடல்நல கோளாறை ஏற்படுத்தும் மைதா மாவு பரோட்டாவுக்கு கேரளாவில் தடையே இருக்கிறது.
பரோட்டா பிரியர்களே கவனமாக இருங்கள்.