Singles Day (Photo Credit: Wikipedia Commons)

நவம்பர் 11, சென்னை (Chennai): உலகில் நமது வரலாற்றின் முந்தைய நினைவுகளை எதிர்கால சந்திகள் நினைவுகூறவும், கொண்டாடவும் அந்நாட்கள் சிறப்பிக்கப்படும் முறை என்பது இருந்து வந்தது. அந்தந்த நாடுகளில் பிரதானமாக கடைபிடிக்கப்படும் நாட்காட்டிபடி இவை நடைபெறும்.

உலகளவில் ஒவ்வொரு விசயத்திற்கும் பண்டிகைகள் என்பது உள்ளன. சில சர்வதேச அளவில் குறுகிய காலத்திலும் பிரபலமடைகின்றன. அந்த வகையில், காதலர் தினம் உலகளவில் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும்.

அந்த நாளில் நண்பர் தனது மனதை கவர்ந்த துணையிடம் காதலை வெளிப்படுத்தி, வாழ்க்கையை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவார்கள். இந்நிலையில், காதலர் தினத்திற்கு எதிராக, காதல் வயப்படாத அல்லது காதல் வயப்பட்ட வழியில்லாத இளைஞர்கள், தங்களை ஒற்றையராக கருதி பெருமிதம் கொண்டனர். ICC CWC 2023: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி அமோக வெற்றி: இன்று நடைபெறும் 2 ஆட்டங்கள்.. விபரம் இதோ.! 

இதனையடுத்து, காதலர் தினம் சிறப்பிக்கப்படுவதை போல, நவம்பர் 11 அன்று ஒற்றையர் தினம் எனப்படும் Singles Day கொண்டாடப்படுகிறது. சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தில், கடந்த 1993-ல் ஒற்றையர்களை எதிர்த்து விளையாட்டுத்தனமாக தொடங்கிய கொண்டாட்டம், இன்று உலகளவில் வரவேற்கப்பட்டது.

இன்றைய நாளில் இன்று வரை துணை கிடைக்காமல் தனிமையில் இருப்பவர்கள், தங்களுக்கான நாளாக சிறப்பித்து வருகிறார்கள். நமது ஊர்களில் காதலில் விழும் 2 கே கிட்ஸ், 90 கிட்ஸ் சிங்கிள்ஸை கலாய்ப்பது நடக்கும் நாளாக இன்று கொண்டாடப்படும்.

சிங்கிள்ஸோ கமிட்டடோ எதுவாக இருப்பினும், நமது இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி உண்டு. அந்த வெற்றி நம்மை கட்டாயம் கமீட்டாக வைக்கும் என்பதை எண்ணி, வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணத்தை தொடரும் சிங்கிள்ஸ் அனைவர்க்கும், இனிய சிங்கிள்ஸ் தின நல்வாழ்த்துக்கள்.

"சிங்கிள்ஸ் தவம் அல்ல வரம்"..