நவம்பர் 11, சென்னை (Sports News): 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023, இந்தியாவில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் 42 ஆட்டங்கள் நடைபெற்ற முடிந்த நிலையில், இன்று (நவ.11, 2023) ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் - தென்னாப்பிரிக்கா (Afghanistan Vs South Africa) அணியும் மோதிக்கொண்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் சார்பில் விளையாடிய ஒமர்ஜாய் 17 பந்துகளில் 97 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமல்லாமல் தாக்குப் பிடித்தார். மேலும், ரகுமானுல்லா 22 பந்துகளில் 25 ரன்னும், இப்ராகிம் 30 பந்துகளில் 15 ரன்னும், ரஹ்மத் 46 பந்துகளில் 26 ரன்னும், ரஷீத் கான் 30 பந்துகளில் 14 ரென்னும், நூர் அகமது 32 பந்துகளில் 26 ரன்னும் அடித்திருந்தனர். Tirupattur Bus Crash: தமிழ்நாடு அரசு விரைவுப்பேருந்து - தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 3 ஆண்கள், 1 பெண் பலி..!
இதனையடுத்து, 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 47.3 ஓவரில் 247 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பில் விளையாடிய குயிண்டன் 47 பந்துகளில் 41 ரன்னும், பாவுமா 28 பந்துகளில் 23 ரன்னும், ரஃசி 95 பந்துகளில் 76 ரன்னும், டேவிட் 33 பந்துகளில் 24 ரன்னும், ஆண்டிலே 37 பந்துகளில் 39 ரன்னும் அடித்திருந்தனர்.
இதனால் ஆட்டத்தின் இறுதியில் 247 ரன்கள் அடித்த தென்னாபிரிக்க அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. இன்றைய நாளில் (நவ.11, 2023) ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் (AUS Vs BAN) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் காலை 10:30 மணியளவில் மும்பையில் உள்ள உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து, மதியம் 2 மணிக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் (ENG Vs PAK) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலின்படி, இந்தியா தனக்கு எதிரான எட்டு போட்டிகளிலும் வெற்றி அடைந்து 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா அணி 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி அடைந்து 14 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்வுகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார் செயலி வழியே நேரலையில் காணலாம்.