Tamil Puthandu 2025: இன்று தமிழ் வருடப்பிறப்பு 2025: வாழ்த்துச் செய்தி, கொண்டாட்டங்கள் வழிமுறைகள் இதோ.!
தமிழ் பேசும் ஒவ்வொருவரும் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. சித்திரை மாதத்தின் தொடக்கத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் சிறப்பித்து வருகின்றனர்.
ஏப்ரல் 14, சென்னை (Chennai News): உலகத்தமிழர்களால் ஒற்றுமையுடன் சிறப்பிக்கப்படும் தமிழ் புத்தாண்டு 2025 (Tamil Puthandu 2025) பண்டிகை இன்று சிறப்பிக்கப்படுகிறது. இன்று தமிழ் மாதமான சித்திரையின் முதல் நாள் தொடங்குகிறது. சூரிய நாட்காட்டியில், மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாளில் தமிழ் புத்தாண்டு தினம் (Tamil New Year 2025 Today) சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளின் தொடக்கம் ஒவ்வொரு தமிழரின் வாழ்வில் மட்டுமல்லாது, உலகத்தாரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை வழங்க கோவில்களில் சிறப்பு பூஜையும் நடைபெறும். இன்று குலதெய்வத்தை வேண்டி வழிபடுவது நல்லது. பங்குனி உத்திரத்தை முடித்த கையுடன் தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தமிழ் வருடப்பிறப்பு (Tamil Varuda Pirappu 2025) ஆகும். இன்று உலகத்தமிழர்கள் சிறப்பிக்கும் பண்டிகையின் வாழ்த்துக்களை பகிர லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பிரதிதேய்க வாழ்த்துச் செய்தியையும் உங்களுக்காக பகிருகிறது. Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு 2025.. தேதி என்ன? என்ன செய்யலாம்? விபரம்., வாழ்த்துச் செய்தி இதோ.!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
1. வாசகர்களாகிய நீங்கள் மென்மேலும் உங்களின் வாசிப்பை வளர்த்து, தொடர்ந்து ஆதரவை வழங்கிட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

2. இவ்வாழ்த்துக்களை உங்களின் நண்பர்களுக்கும் பகிர்ந்து, தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க எமது லேட்டஸ்ட் லி தமிழ் சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

3. எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

4. இந்த வருட புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவரவாழ்த்துகிறேன், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

5. நலமும் வளமும் தழைக்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

6. இன்னல்கள் நீங்கி புத்துணர்வு மேலோங்கி வளர்க, இப்புத்தாண்டில் வாழ்த்துகின்றேன்.

7. தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

8. அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் லேட்டஸ்ட்லி தமிழ் தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.

9. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
10. தமிழ் புத்தாண்டில் புதிய இலக்கு, கனவுகள் நெருங்கட்டும், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

11. இதயம் நிறைந்த நன்றி, நல்ல நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

12. நமது குடும்பத்திற்கு அன்பு, அமைதி, செழிப்பு ஆக்கியவற்றை புத்தாண்டு தரட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

13. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்போம், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

14. புத்தாண்டின் புதிய தொடக்கத்தை இருகரம் நீட்டி, அன்புடன் வரவேற்போம்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

15. வாழ்வின் சூரிய ஒளியாக இருக்கும் துணையே, தமிழ் புத்தாண்டில் மேலும் நமது நெருக்கத்தை வலுப்படுத்தி, அன்பு, ஆதரவு, புரிதலை வெளிப்படுத்தி, உற்சாகமாக, வெற்றிகரமாக நமது நினைவுகளை உருவாக்குவோம், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

16. அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த ஆண்டாக தமிழ் புத்தாண்டு அமைய, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

17. தமிழ் புத்தாண்டு புதிய வாய்ப்பு, முயற்சி அனைத்தையும் ஏற்படுத்திக்கொடுத்து வெற்றியைத்தர, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

18. நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மறை நிறைந்த புதிய அத்தியாயம் இன்பமாய் உங்களுக்கு தொண்டாகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

19. உங்களின் மீதும், உங்களின் குடும்பத்தின் மீதும் இறைவனின் அருள் எப்போதும் இருக்கட்டும், இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்!

20. இருகரம் கூப்பி அன்புடன் புத்தாண்டை வரவேற்போம், புத்தாண்டின் புதிய தொடக்கத்தை மகிழ்ச்சியுடன், உற்சாகத்துடன் கொண்டாடுவோம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

21. இந்த புதிய ஆண்டில் புதிய வாய்ப்பு, வெற்றி நிறைந்த ஆண்டை ஏற்படுத்த பிரார்த்தனை செய்வோம், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Tamil New Year 2025 Images & Puthandu Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varusha Pirappu
(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 07:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

