ஏப்ரல் 10, சென்னை (Chennai): ஆங்கில நாட்காட்டிபடி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி, தமிழுக்கு சித்திரை 01 அன்று தமிழ் புத்தாண்டு (Tamil Puthandu) தினம் சிறப்பிக்கப்படுகிறது. இந்து மற்றும் தமிழ் சாஸ்திரப்படி சூரிய நாட்காட்டியில், மேஷ ராசிஇயல் சூரியன் பிரவேசிக்கும் நாளில் தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது. சித்திரையில் தொடங்கும் மாதம் பங்குனியில் நிறைவுபெறுகிறது. புத்தாண்டு நன்னாளில் வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணம் அலங்காரம் செய்து, தெய்வங்களுக்கு மா, பலா, வாழை ஆகிய உணவுகளை சமைத்து படையலிட்டு வழிபடுவது நல்லது.
தமிழ் புத்தாண்டு 2025 (Tamil Puthandu 2025):
2025ம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 14, 2025 அன்று காலை 06:30 மணிமுதல் 07:30 வரை, மாலை 04:30 மணிமுதல் 05:30 மணிவரை சாமி கும்பிட நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் வருடப் பிறப்பு (Tamil Varuda Pirappu 2025) நன்னாளில் ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம், பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கலாம், மஞ்சள், உப்பு, அரிசி, கற்கண்டு வாங்கி வைக்கலாம். பொங்கலிட்டு வழிபடலாம். உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு சென்று வாழ்த்துக்களை சொல்லி அவர்களுடன் சில நேரம் செலவிடலாம். எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) நிறுவனமும் எதிர்வரும் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. இத்துடன் உங்களுக்கான சிறப்பு வாழ்த்து செய்திகளையும் இணைக்கிறது. வாழை இலையில் பல்சுவை உணவுகள் ஐந்து சர்க்கரை பொங்கல், சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம், பாயாசம், வாழைப்பழம் சாப்பிட்டு, அந்த நாளை சைவ தீபாவளி போன்று கொண்டாடுவோம். Panguni Uthiram 2025: பங்குனி உத்திரம் 2025 எப்போது? பூஜைகள் மற்றும் விரத முறைகள் குறித்த முழு விவரம் இதோ..!
கடந்த சில ஆண்டுகள் வரை ஒவ்வொரு பண்டிகைக்கும் அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பலகாரம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம் (Greetings). ஆனால் இன்றைய காலத்தில் எல்லாருக்கும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்கிறோம். (Tamil New Year 2025 Wish Status) ஆதலால், உங்களுக்காக புத்தாண்டு சிறப்பு கவிதைகளைப் (Quotes) பகிர்ந்துள்ளோம்.
1. அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த ஆண்டாக தமிழ் புத்தாண்டு அமைய, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

2. தமிழ் புத்தாண்டு புதிய வாய்ப்பு, முயற்சி அனைத்தையும் ஏற்படுத்திக்கொடுத்து வெற்றியைத்தர, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

3. நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மறை நிறைந்த புதிய அத்தியாயம் இன்பமாய் உங்களுக்கு தொண்டாகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

4. உங்களின் மீதும், உங்களின் குடும்பத்தின் மீதும் இறைவனின் அருள் எப்போதும் இருக்கட்டும், இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்!

5. இருகரம் கூப்பி அன்புடன் புத்தாண்டை வரவேற்போம், புத்தாண்டின் புதிய தொடக்கத்தை மகிழ்ச்சியுடன், உற்சாகத்துடன் கொண்டாடுவோம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

6. இந்த புதிய ஆண்டில் புதிய வாய்ப்பு, வெற்றி நிறைந்த ஆண்டை ஏற்படுத்த பிரார்த்தனை செய்வோம், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் லேட்டஸ்ட்லி தனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்-ஐ தெரிவித்துக்கொள்கிறது.
Tamil New Year 2025 Images & Puthandu Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varusha Pirappu