Minor Saves Life: மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை நொடியில் காப்பாற்றிய கல்லூரி மாணவர்; வைரல் வீடியோ உள்ளே.!

தொண்டையில் உணவு சிக்கியதால் முதியவர் பரிதவித்த நிலையில், அங்கு வேலைபார்த்துக்கொண்டு இருந்த 16 வயது கல்லூரி மாணவர், சுதாரிப்புடன் விரைந்து செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றினார்.

Minor Saves Life: மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை நொடியில் காப்பாற்றிய கல்லூரி மாணவர்; வைரல் வீடியோ உள்ளே.!
16 Aged Young Saves Old Man Life (Photo Credit: Twitter)

செப்டம்பர் 03, வைரல் (Social Viral): நாம் சாப்பிடும்போது நமது மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய் பிரியும் இடங்களில் சிலநேரம் உணவுகள் சிக்கிக்கொள்வது நடக்கும். வயதானவர்களுக்கும், சிறிய குழந்தைகளுக்கும் இவ்வகை பிரச்சனை அதிகம் நேருவது உண்டு.

இந்நிலையில், 16 வயது கல்லூரி மாணவர், முதியவரின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு நடந்துள்ளது. உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த முதியவருக்கு, திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டுள்ளது. Raashi Khanna: என்ன அழகு சார்.. பார்க்கப்பார்க்க ஜொலிக்கும் நட்சத்திரமாய் மின்னும் ராஷி கன்னா; வைரல் போட்டோ உள்ளே.! 

தொண்டையில் உணவு சிக்கியதால் முதியவர் பரிதவித்த நிலையில், அங்கு வேலைபார்த்துக்கொண்டு இருந்த 16 வயது கல்லூரி மாணவர், சுதாரிப்புடன் விரைந்து செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றினார். இந்த நிகழ்வுகள் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

சிறுவனின் செயல்பாட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதியவர் மூச்சடைப்பால் அவதிப்படுவதை கண்டு சிறுவன் உதவி செய்தார். அப்போது, இரண்டு பெண்கள் உட்பட அவ்வழியே சென்ற வழிப்போக்கர்கள் வேடிக்கை பார்க்க, ஒருவர் மட்டும் என்ன நடந்தது என கேட்டு உதவ முன்வந்தார்.

(The above story first appeared on LatestLY on Sep 03, 2023 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).