Minor Girl Sexually Assaulted in Temple CCTV Footage (Photo Credit: @SachinGuptaUP X)

மே 28, ஆக்ரா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் (Agra) 5 வயது சிறுமி, கோவிலில் வைத்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்யப்பட்டார். இச்சம்பவம், மே 18ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெண் மருத்துவர் கொடூர கொலை.. மாமியார், மாமனார் வெறிச்செயல்..!

சிறுமி பாலியல் வன்கொடுமை:

இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரை விடுவித்தனர். இந்நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், பம்மி என்ற நபரை மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி இதோ: