Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

மே 28, பெலகாவி (Karnataka News): கர்நாடக மாநிலம், பெலகாவி (Belagavi) மாவட்டத்தை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). பெண் மருத்துவரான இவர், மகாராஷ்டிராவின் சதாராவில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரியும் சந்தோஷ் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தொடக்கத்திலிருந்தே தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். ரேணுகாவிற்கு குழந்தை இல்லாதது காரணமாகவே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சந்தோஷ் வேறு திருமணம் செய்துள்ளார். Corona Virus: கொரோனா வைரஸ் தொற்றால் 6 பேர் பலி.. 10 நாட்களில் 753 பேர் பாதிப்பு.. மக்களே கவனமா இருங்க.!

பெண் மருத்துவர் கொலை:

இந்நிலையில், மே 18ஆம் தேதி மாமியார் ஜெயஸ்ரீ, ரேணுகாவை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அன்று இரவு திரும்பி வரும் போது, ரேணுகா விபத்தில் இறந்துவிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ரேணுகாவை தவிர மற்ற யாருக்கும் விபத்தில் காயங்கள் ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணை:

இதுகுறித்த விசாரணையில், கோவிலுக்கு சென்ற ரேணுகாவை செல்லும் வழியில், பைக்கில் இருந்து அவரது மாமியார் ஜெயஸ்ரீ தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்தவரை கல்லால் தாக்கி, கழுத்தை நெரித்து அவரது மாமனார் கமன்னா கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளார். பின்னர், இருவரும் அவரது உடலை பைக்கில் கட்டி, 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்று, அவரது சேலை பைக் சக்கரத்தில் சிக்கியதால் விபத்து ஏற்பட்டது என கூறியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, ஜெயஸ்ரீ மற்றும் கமன்னா கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களின் மகன் சந்தோஷ் ரேணுகாவைக் கொல்லத் தூண்டியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.