13-Year-Old Girl Dies Of Heart Attack: 13 வயது பள்ளி மாணவி... மாரடைப்பால் மரணம்...

கர்நாடகா மாநிலம் சிக்மகளூருவைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

13-Year-Old Girl Dies Of Heart Attack: 13 வயது பள்ளி மாணவி... மாரடைப்பால் மரணம்...
Girl Dies (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, கர்நாடகா (Karnataka): கர்நாடகா மாநிலம், சிக்மகளூருவில் உள்ள தாரதஹள்ளி ஆரம்பப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர் ஹத்தாத் (வயது 13). இன்று வழக்கம் போல் காலை பள்ளிக்குச் சென்ற சிறுமி, செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுமியை தாரதஹள்ளி ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவர் யாரும் இல்லையாம். இதனால் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி ஹத்தாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Vegetable Price Rise: மீண்டும் உயர்ந்த காய்கறி விலை... காரணம் என்ன?.!

(The above story first appeared on LatestLY on Dec 22, 2023 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).