Chicken Piece Death (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 23, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கொத்தி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 39). இவர் சம்பவத்தன்று சாத் நகரில் உள்ள அன்னாராம் கிராமத்தில், தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சிkku பின் மதுபானம் அருந்தி இருக்கிறார். Bajrang Punia Suspended: ஊக்க மருந்து தடையை மீறியதாக பஜ்ரங் புனியா இடைநீக்கம் - தேசிய ஊக்கமருந்து முகமை உத்தரவு.! 

எமனான போதை பழக்கமும் & சிக்கன் பிரியாணி:

இதனிடையே, மதுபானம் அருந்தியவர், சிக்கன் பிரியாணி (Chicken Biryani) வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். பின் அவர் சாலையில் நடந்துசென்றபோது, சிக்கன் பீஸ் ஒன்று தொண்டையில் (Chicken Piece Stuck into Throat) மூச்சுக்குழாயில் சிக்கி இருக்கிறது. இதனால் நிலைகுலைந்து விழுந்தவர் பரிதாபமாக சில நொடிகளில் உயிரிழந்தார்.

சாலையில் மயங்கி கிடந்தவர் குறித்து பொதுமக்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்க, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.