YouTuber Dies by Suicide: வரதட்சணை கொடுமையா பிரபல பெண் நகைச்சுவை யூடியூபர் தற்கொலை; கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு.!
பிறப்பு முதல் இறப்பு வரை இலஞ்சம் ஒவ்வொரு தனிமனிதரையும் பின்தொடர்வது போல, வரதட்சணை கொடுமை ஒவ்வொரு பெண்ணையும் பாடாய் படுத்துகிறது. பெண்ணாலேயே மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் முதல் அநீதியாக திருமண பந்தத்தில் வரதட்சணை இருக்கிறது.
நவம்பர் 25, உத்திரபிரதேசம் (Cinema News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்த் கபீர் நகர் பகுதியை சேர்ந்தவர் மால்தி தேவி (வயது 23). இவர் அங்குள்ள யூடியூப் வட்டாரத்தில் பிரபலமான பெண்மணி ஆவார். எப்போதும் நகைச்சுவை சார்ந்த விடீயோக்களை பதிவு செய்து வந்துள்ளார்.
இவரின் கணவர் விஷ்ணு குமார். தம்பதிகள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒன்றாக வசித்து வருகின்றனர். மால்தி தேவி தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது. Rajasthan Assembly Election 2023: 199 தொகுதிகளுக்கான ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது: விறுவிறுப்புடன் பதிவாகும் வாக்குகள்.!
இதுகுறித்து கணவரின் குடும்பத்தினர், தேவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த அவர்கள் மகள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், மகளை விஷ்ணு குமாரின் குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் மகளின் மர்ம மரணம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். வரதட்சணை கொடுமை காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், மால்தி தேவியின் கணவர் விஷ்ணு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கணவர் மற்றும் அவரின் வீட்டார் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, அது சார்ந்த புகாரும் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

