Rajasthan Assembly Poll 2023 (Photo Credit: @ANI X)

நவம்பர் 25, ஜெய்ப்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, இன்று சட்டப்பேரவை (Rajasthan Assembly Poll 2023) தேர்தல் 2023 வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 51,507 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநில தேர்தல் ஆணையர் பிரவீன் குப்தா தலைமையில் இத்தேர்தல் வழிநடத்தப்பட்டுவருகிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அங்குள்ள ஸ்ரீகங்காநகர் மாவட்டம் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கனார் மறைந்ததால், அத்தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

199 தொகுதிகளிலும் வசித்து வரும் 5,25,38,105 வாக்காளர்கள் இன்று தங்களின் ஜனநாயக கடமையை செலுத்துதவுள்ளனர். சர்தார்புரா தொகுதியில் முதல்வர் அசோக் கெலாட் (Ashok Gehlot), ஜால்ராப்பட்டான் தொகுதியில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, டோன்க் தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் (Sachin Pilot) ஆகியோர் போட்டியிடுகின்றனர். Flipkart Prize Scam Alert Exclusive: பிளிப்கார்ட்டில் ரூ.15 இலட்சம் பரிசு விழுந்ததாக வரும் போலி அழைப்புகள்: மக்களே உஷார்.. ஆசையாக பேசி ஆப்படிக்கும் மோசடி.! 

அங்குள்ள 199 தொகுதிகளில் 1,862 வாக்காளர்கள் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் 1.70 இலட்சத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 70 ஆயிரம் ராஜஸ்தான் மாநில காவலர்கள், 18 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்கள், 2 ஆயிரம் ராஜஸ்தான் மாநில எல்லை ஊர்காவல்படை வீரர்கள், உத்திரபிரதேசம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 15 ஆயிரம் ஊர்காவல்படை வீரர்கள், 120 துணை இராணுவ கம்பெனிகளும் அங்கு பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும் - பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 03ம் தேதி வெளியாகிறது. கடந்த 1998ல் இருந்து சர்தார்புரா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள அசோக் கெலாட், 3 முறை அம்மாநில முதல்வர் பொறுப்பில் பணியாற்றி இருக்கிறார். அவரை எதிர்த்து அதே தொகுதியில் பாஜக சார்பில் மகேந்திர சிங் ரத்தோர் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.

இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் டோன்க் தொகுதியில், சச்சின் பைலட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அஜித் சிங் மெஹ்தா போட்டியிடுகிறார். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் முக்கிய புள்ளிகளும் இருக்கின்றனர். இதனால் சொந்த கட்சிக்கே இருதரப்பிலும் சில ஊர்களில் எதிர்பார்த்த வாக்கு வருமா? என்பது சந்தேகமாகியுள்ளது.

அதேவேளையில், இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி, ஆம் ஆதமியும் தேர்தலில் பங்கேற்றுள்ளது.