Trending Video: அடேய் சோணமுத்தா போச்சா?; டூவீலரில் கெத்து காட்ட நினைத்து, தோழியோடு விழுந்து வாரிய இளைஞர்... ட்ரெண்டிங்கில் வீடியோ.!
இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்தும் திறனை மூளையில் சரியாக பதிவு செய்ய வைத்து, நொடிக்கும் குறிஅவன நேரத்தில் பல செயல்களை ஒருங்கே செய்யும் நபர்கள், அந்த உத்வேகத்தை பிற விஷயத்திலும் ஈடுபடுத்துவது நல்லது.
ஆகஸ்ட் 17, வைரல் (Trending Video): இருசக்கர வாகனங்கள் நமது பயணத்தை எளிதாக்க, தனிநபரின் தேவையை பூர்த்திசெய்ய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கண்டறியப்பட்டன. ஆனால், இன்றளவில் அதனை பலவகையில் நாம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.
அவற்றின் இயக்கங்களை சரியாக கணித்து செயல்படும் சில இளைஞர்கள், இருசக்கர வாகனங்களை வைத்து (Crazy Couple Bike Stunt Ends Failure) சாகசம் செய்து வருகின்றனர். அவை பார்ப்பதற்கு பயத்துடன் கூடிய மிரட்டல் அனுபவமாக இருக்கும் எனினும், ஆபத்துகள் நிறைந்த விஷயம் அது. Fast Bowler Announces Retirement: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்; ரசிகர்களின் எதிர்பார்ப்பில் திடீர் ட்விஸ்ட்..!
காட்சிகள் மாறி நொடியில் ஏற்படும் விபத்தால் நமது உயிருக்கும் ஆபத்து நேரலாம். இந்நிலையில், இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் போது, இருவரும் தவறி விழுந்துவிடுகின்றனர். இந்த வீடியோ தான் கலாய்ப்பதற்கு காத்திருந்த பல உள்ளங்களிடையே பரவி வைரலாக்கப்பட்டு வருகிறது.
இருசக்கரமோ, நான்கு சக்கரமோ இயக்கம் கொண்ட இயந்திரங்களில் நாம் கவனமாக இல்லாத பட்சத்தில் கட்டாயம் எமன் நமக்கு பாசக்கயிறை வீசிக்கொண்டு காத்திருப்பர் என்பது நிச்சயம். இருவராய் சென்று ஒருவராய் தப்பி வந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலிகள் புரியும். மிதவேகம் மிகநன்று.
(The above story first appeared on LatestLY on Aug 17, 2023 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

