ஆகஸ்ட் 11, வைரல் (Trending Video): மனிதனின் கண்டுபிடிப்புகள் அவனின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. ஆனால், மனிதனோ வளர்ச்சியே தன்னை வளர்ந்துவிட்டேனா? என ஆச்சரியப்பட்டு பார்க்கும் வகையில் வளர்ச்சியை தனது கேலியால் தவிடுபிடியாக்கி வருகின்றனர்.
எவர் கைகளை எடுத்துக்கொண்டாலும் செல்போன், அதில் ரீலிஸ் வீடியோ பார்ப்பது அல்லது பதிவிடுவது, தனது திறமையை சாவின் எல்லைக்கும் சென்று வெளிப்படுத்துவேன் என்ற எண்ணத்தில் சாகசங்கள் செய்வது என இவர்கள் செய்யும் கூத்து தனிரகம். வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வித்தை காண்பித்த 2 இளைஞர்கள், ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போதே விழுந்துவாரிய சம்பவம் நடந்தது. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர், தனது நண்பரையும் உடன் அழைத்து வாகனத்தை ஆட்டி-ஆட்டி இயக்கினார். Hawaii Forest Fire: காட்டுத்தீயின் பிடியில் சிக்கிய ஹவாய்; 53 பேர் பரிதாப பலி.. வெளியேற்றப்பட்ட 14 ஆயிரம் மக்கள்.!
அப்போது, எதிர்பாராத விதமாக அவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சிரித்துக்கொண்டு கெத்து காண்பிப்பதாக நினைத்த இருவரும் நொடியில் மாறிய காட்சியால் கை-கால்களை சிராய்த்துக்கொண்டு மருத்துவமனையில் கட்டுபோடும் நிலைக்கு ஆளாகினர்.
இன்றளவில் உள்ள இளைஞர்களிடையே எதையும் பார்த்துக்கொள்ளலாம் என்ற வீரம் இருப்பது பாராட்டத்தக்கது என்றாலும், அவை இடம்-பொருள்-ஏவல் என்ற விஷயங்களை பொருத்தும், நமது செயல்பாடுகளை பொருத்தும் மாறுபட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
હોંશિયારી ભારે પડી, સ્ટંટ કરવા ગયા ને ઊંધા મોઢે પડ્યા...#viralvideo #virals #trendingreels #ZEE24KALAK #stunts #RoadAccident #accident pic.twitter.com/LNTOUE2Oxx
— Zee 24 Kalak (@Zee24Kalak) August 11, 2023