Hawaii Forest Fire (Photo Credit: The New York Times / The Associated Press Twitter)

ஆகஸ்ட் 11, ஹவாய் (United States): உலகளவில் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக மழை, வெப்பம், வெள்ளம் என இயற்கை பேரிடர் சீற்றங்கள் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற கண்டங்கள் கடுமையான வெப்பத்தினை எதிர்கொண்டு வருகின்றன.

குறிப்பாக டெக்ஸாஸ் உட்பட அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட ஆசியாவின் பல நாடுகளும் வெப்ப அலையினை சமாளிக்க இயலாமல் திணறி வருகின்றன. அமெரிக்கா தனது குடிமக்களை காப்பாற்ற தேவையான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தீவுக்கூட்ட நாடுகளில் ஒன்றான ஹவாயில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ அங்குள்ள மயூ (Maui County) கவுண்டி பகுதியில் இருந்து ஏற்பட்டு ஹவாயை திணறவைத்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் களமிறக்கட்டுள்ளனர்.

ஹவாயில் லஹைனா (Lahaina Fire) பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். காட்டுத்தீயில் சிக்கி தற்போது வரை 53 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். கிட்டத்தட்ட 14 ஆயிரம் மக்கள் மயூ தீவுகளில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். UP Crime: பாஜக பிரமுகர் நடுரோட்டில் 3 பேர் கும்பலால் சுட்டுக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின், அதிர்ச்சி CCTV வீடியோ.!

ஹவாய்க்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் பொருட்டு, மறுஅறிவிப்பு வரும் வரையில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விடுமுறைக்காக (Vacation) வந்தோர் அனைவரும் மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80% பகுதிகள் அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றுள்ளன. மின்சார சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹவாய் நிர்வாகத்துடன் பேசி, உதவி செய்ய முன்வருவதாகவும் அறிவித்துள்ளார். அதேபோல, நிலைமை சரியானதும் சுற்றுலாவை மீண்டும் தொடங்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா ஆகிய நாடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட்ட நிலையில், தற்போது ஐரோப்பாவும் எரிந்தது, ஹவாயும் எரிகிறது.