Trending Video: தாத்தாவுடன் சோபாவில் படுத்து லூட்டி செய்யும் பூனை; கலக்கல் வீடியோ உள்ளே.!
பூனை சோபாவில் தாத்தாவின் பேரனைப்போல படுத்து இருக்கிறது. இதனை வீடியோ எடுத்த குடும்பத்தினர், இணையப்பக்கத்தில் அதனை பதிவு செய்ததை தொடர்ந்து வைரலாகி இருக்கிறது.
செப்டம்பர் 04, வைரல் (Social Viral): நமது வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால், நமது கவலைகள் என்றுமே மறந்துபோகும். நாம் இன்றளவில் இருக்கும் வணிகமயமான வாழ்க்கையில், நமது தேவைக்காகவோ அல்லது குடும்பத்தின் தேவைக்காக தொடர்ந்து அயராது ஓடோடிக்கொண்டு இருக்கிறோம்.
இப்படியான தருணங்களில் நமது வீட்டில் நம்முடன் இருக்கும் செல்லப்பிராணிகளை நாம் கவனித்தால், அவை செய்யும் குறும்புத்தனங்கள் நம்மிடையே இனம்புரியாத நகைப்பை ஏற்படுத்தும். அவற்றை அழைத்தால் உடனே வந்து நம்மை செல்லம்கொஞ்சி புரண்டு விளையாடும். Young Attacked by Cow: இளைஞனை விரட்டி கொம்புகள் முட்டி தூக்கி, துவம்சம் செய்த மாடு; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
இப்படியான பல சுவாரசியங்கள் நமது வீடுகளில் நடக்கும். இன்னும் ஒருசில செல்லப்பிராணிகள் நமது செயல்களை பார்த்து, அவைகளும் நம்மைப்போலவே செயல்படும். இந்நிலையில், பூனை ஒன்று வயதான தாத்தாவுடன் சோபாவில் படுத்து இருக்கிறது.
அந்த பூனை சோபாவில் தாத்தாவின் பேரனைப்போல படுத்து இருக்கிறது. இதனை வீடியோ எடுத்த குடும்பத்தினர், இணையப்பக்கத்தில் அதனை பதிவு செய்ததை தொடர்ந்து வைரலாகி இருக்கிறது.