Trending Video: "நீ தில்லான ஆளுதான் தல, கரணம் தப்பினால் மகனே".. ஓடும் ரயிலுக்கு அடியில் இளைஞர் பகீர் செயல்.!

ஒவ்வொருவரும் எதிர்காலம் குறித்து பேசும்போது, எதிர்கால சந்ததியின் நலன் குறித்தும் பேசுதல் வேண்டும். அவர்களுக்கு எதிர்கால தேவைகளை சரியான விஷயங்களுடன் விட்டுச்செல்ல வேண்டும்.

Snips From Video (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 02, ட்ரெண்டிங் வீடியோ (Trending Video): இந்த உலகில் எதோ ஒரு உயிரினமாய் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அதன் உயிர்மதிப்பு என்பது விலைமதிப்பில்லாதது. ஏனெனில் அவ்வுயிர் அதன் நோக்கத்தை நிறைவேற்றாத பட்சத்தில், அவை பாரமாகவே கருதப்படும்.

சான்றோர்களின் கூற்றுப்படி இறைவன் பார்த்துப்பார்த்து ஒவ்வொரு விஷயத்திலும் உருவாக்கிய பூவுலகம் தொழில்நுட்ப புரட்சியால் பல இழிநிலைகளை சந்தித்து வருகிறது. அவை பூமியின் ஆரோக்கியத்தையும் பாதித்து வருகிறது.

ஒவ்வொருவரும் எதிர்காலம் குறித்து பேசும்போது, எதிர்கால சந்ததியின் நலன் குறித்தும் பேசுதல் வேண்டும். அவர்களுக்கு எதிர்கால தேவைகளை சரியான விஷயங்களுடன் விட்டுச்செல்ல வேண்டும். Nitin Chandrakant Desai: ஸ்டுடியோவில் தற்கொலை செய்துகொண்ட சினிமா கலை இயக்குனர்; நடந்தது என்ன?.. கண்ணீரில் திரையுலகம்.!

ஆனால், மிகப்பெரிய பொறுப்பை சுமந்துகொண்டு இருக்கும் இன்றைய இளம் தலைமுறையோ, ட்ரெண்டிங் - ரீல்ஸ் மோகம் என சீரழிந்து வருகிறது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் பார்வையாளர்களுக்காக இரயில் அடியில் படுத்த சம்பவம் நடந்துள்ளது.

இரயில் தண்டவாளத்தில் அதிவேகத்தில் இரயில் வரும்போது, இளைஞர் அடியில் படுத்து வீடியோ எடுத்துள்ளார். ஒருநிமிட வேடிக்கை செயல் மிகப்பெரிய விபரீதத்தில் முடியலாம். அதேபோல இவ்வாறான செயல் சட்டத்திற்கு புறம்பானவை, தண்டனைக்குரியவை.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement