Viral Video: கல்லூரியில் மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்யும் அலுவலக கண்காணிப்பாளர்... வைரலாகும் வீடியோ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் குடித்துவிட்டு அட்டூழியம் செய்யும் ஆசிரியரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Viral Video: கல்லூரியில் மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்யும் அலுவலக கண்காணிப்பாளர்... வைரலாகும் வீடியோ..!
Drunk college teacher (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 09, தூத்துக்குடி (Thoothukudi): தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவடிச்செல்வம் என்பவர் அலுவலக கண்காணிப்பாளாராக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி நேரத்தில் மது அருந்திவிட்டு, புகையிலை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் தரக் குறைவாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார் என்று புகார்கள் முன் வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பேராசிரியர்களிடம் செருப்பை காண்பித்தல், விரிவுரையாளர்களை அமர வைத்து பேசக்கூடாது என்று பேசி வருகிறார். இந்நிலையில் இவர் கல்லூரியில் போதையில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அவரின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  Car Truck Accident: லாரியின் மீது கார் மோதி பயங்கர விபத்து; 2 காவலர்கள் பரிதாப பலி.! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.!

(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 07:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).