ஜூலை 22, பெங்களூரு (Karnataka News): நாட்டில் தகவல் தொழில்நுட்ப மையமாக (IT Firms) பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கான வேலை நேரத்தினை ஒரு நாளைக்கு 14 மணி நேரமாக உயர்த்த (14-Hour Workday), கர்நாடக அரசுக்கு தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில் ஐடி ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் பணி செய்ய வேண்டும். இது தொடர்பாக கர்நாடகத் தொழில் துறை அமைச்சகம் சார்வில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. NEET Issue On Lok Sabha: நீட் தேர்வு விவகாரம்.. மக்களவையில் பொங்கி எழுந்த ராகுல்.. அனல் பறந்த விவாதங்கள்..!
இந்த நிலையில் மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் 35 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் (Software engineer at Microsoft) வார இறுதி நாட்களில் நம்ம யாத்திரி என்ற செயலியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், வார இறுதி நாட்களில் தனிமையாக இருப்பதாகவும் தனிமையை போக்கிக் கொள்வதற்காக ஆட்டோ ஓட்டுவதாகவும் கூறியுள்ளார்.
Met a 35 year old staff software engineer at Microsoft in Kormangala driving Namma Yatri to combat loneliness on weekends pic.twitter.com/yesKDM9v2j— Venkatesh Gupta (@venkyHQ) July 21, 2024