Dharmendra Pradhan | Rahul Gandhi (Photo Credit: @ANI X)

ஜூலை 22, புதுடெல்லி (New Delhi): 18-வது மக்களவையின் (Lok Sabha) இரண்டாவது கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்தத் தொடரின் முதல் நாளிலேயே நீட் தேர்வு மோசடி (NEET Issue) குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) விவாதத்தினை ஆரம்பித்தார்.

நீட் தேர்வு விவகாரம்: நீட்-யுஜி மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்ற 23 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட பிறகு, தாள் கசிவு வழக்கில் (NEET-UG paper leak) மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தலையீட்டு விண்ணப்பத்தை (IA) தாக்கல் செய்தனர். Karnataka IT Firms Propose 14-Hour Workday: அரும்பாடு படும் ஐடி ஊழியர்களுக்கு வந்த இன்னோரு பிரச்சினை.. ஒரு நாளில் 14 மணி நேர வேலை..!

பொங்கி எழுந்த ராகுல் காந்தி: இது குறித்து மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, "நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். அந்தத் தேர்வினால் நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தேர்வு முறையே மோசடியாக உள்ளது. பணம் இருந்தால் இந்திய தேர்வு முகமையே விலைக்கு வாங்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றவர்களை குறை சொல்கிறார். அவர் தேர்வு முறை கேடுகளுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என ஆவேசமாக பேசியுள்ளார்.

தர்மேந்திர பிரதான் விளக்கம்: இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Education Minister Dharmendra Pradhan), "இந்தியத் தேர்வு முறை புனித தன்மையை இழந்துவிடவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் எந்த ஒரு வினாத்தாள் விற்பனையும் நடக்கவில்லை. நீட் விவகாரம் என்பது தற்போது உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. 240 க்கும் மேற்பட்ட தேர்வுகள் முறுக்கேடுகள் இல்லாமல் வெற்றிகரமாக நடந்து முடிக்கப்பட்டுள்ளது. உங்கள் முழக்கங்களால் பொய் எப்போதும் உண்மையாகாது. இந்திய தேர்வு முறை மோசடியானது என்ற ராகுல் காந்தியின் விமர்சனம் கண்டனத்திற்குரியது" என்றார்.