Crazy Cute Moment Video: தாமதமாக வந்த கணவரை விளாசிய மனைவியும், மனைவிக்காக யோசிக்காமல் கீழே குதித்த கணவனும்.. இப்படியும் தம்பதிகள் இருக்காங்கப்பா..!

தனது காதலுக்காக எதையும் செய்யத்துணியும் மனம், சிலநேரம் தனக்கு ஏற்படும் விளைவையும் யோசிக்காமல் செயல்படவைக்கும். அன்பின் மிகுதி ஆத்திரமாகவும் சில இடங்களில் வெளிப்படும்.

Visuals Taken From Video (Photo Credit: @crazyclipsonly / @vynts_tv X)

டிசம்பர் 05, சென்னை (Chennai): திருமணம் முடிந்த தம்பதிகள் இடையே பலவிதமான சண்டைகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. மோதலில் தொடங்கி காதலான காரியங்களும், காதலில் தொடங்கி மோதலான சம்பவங்களும் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

உள்ளங்கையில் உலகம்: தற்போதைய தொழில்நுட்ப உலகில் அதனை நாம் வீடியோவாக காணும் அரிதான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், பெண்மணி ஒருவர் தனது கணவரை வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக கடுமையாக தாக்குகிறார்.

தாமதமாக வந்தது குற்றமே: கணவர் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்து, தலைக்கவசத்தை அகற்றுவதற்குள் பாய்ந்து வந்த பெண்மணி (Wife Beats Husband) கணவனை திரைப்பட காமெடி காட்சிகள் பாணியில் வெளுத்தெடுப்பதை போல, கண்மூடித்தனமாக தாக்கி விட்டு பின் அங்கிருந்து செல்கிறார். கணவரோ எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக அந்த இடத்திலிருந்து புறப்படுகிறார். X Password as RCBTrophy@000: ஆர்.சி.பி அணியை கலாய்த்து பாஸ்வேர்ட் வைத்த ரசிகர்: சென்னை வெள்ளத்தில் அம்பலமான வேறலெவல் உண்மை.! 

கேமிராவில் பதிவான காட்சிகள்: இதுகுறித்த வீடியோ அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 29 ஜனவரி 2023 அன்று, நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது எங்கு நடைபெற்றது என்ற விபரம் இல்லை. ஆனால், வீடியோ வைரலாகி வருகிறது.

அன்பின் உச்சம்: அதேபோல, தனது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் ஏணி வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென பெண்மணி ஏணியில் இருந்து (Husband Jumped from Floor) கீழே தவறி விழுந்து விடுகிறார். இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த கணவர், மேல் தளத்திலிருந்து மனைவியை காப்பாற்ற கீழே குதித்து மனைவிக்கு என்ன ஆனது என்று பார்க்கச் செல்கிறார். இரு வேறு வீடியோக்களும் இரு வேறு சம்பவங்களாக இருந்தாலும், ஒரு வீடியோ மனைவியின் கண்டிப்புடன் கூடிய அன்பின் அதிகார செயலை உணர்த்துகிறது. மற்றொரு வீடியோ கணவரின் அன்பையும் உணர்த்துவதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

வீட்டிற்கு தாமதமாக வந்த கணவரை வெளுத்து வாங்கும் மனைவி:

மனைவிக்காக நொடியும் யோசிக்காமல் கணவர் செய்த காரியம்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement