Seema Haider: மீண்டும் பாகிஸ்தானுக்கு பேக்கிங்.. கள்ளக்காதல் ஜோடியின் காதலில் விரிசலை உண்டாக்கிய இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை.!
சட்டத்தின்படி பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இந்திய அரசு உத்தரவிட்டுள்ள காரணத்தால், சீமா ஹைதரும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்.
ஏப்ரல் 24, புதுடெல்லி (New Delhi): பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த இளம்பெண் சீமா ஹைதர் (32), கடந்த 2023ம் ஆண்டு நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். விசாரணையில், சீமா தனது இந்திய காதலரான உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் மீனாவை திருமணம் செய்ய விரும்பி தனது கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு வந்தது தெரியவந்துள்ளது. திருட்டுத்தனமாக சீமா இந்தியாவுக்குள் நுழைந்ததால் அவரின் பின்புலம் விசாரிக்கப்பட்டது. பின் அவர் இந்தியாவில் தங்க இந்திய சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டது. PM Modi on Pahalgam Attack: பயங்கரவாதத்தை வேரறுப்போம் - பிரதமர் மோடி சூளுரை.!
சீமா ஹைதரும் வெளியேற்றப்படுவார்:
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹ்லகமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து 28 உயிர்கள் பலியானது. இதனால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவதாக அமைப்பின் மீது ஆத்திரமடைந்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து சாட்டையை சுழற்றி இருக்கிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சீமா ஹைதரும் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். சீமா ஹைதர் - சச்சின் மீனா ஜோடிக்கு குழந்தையும் கடந்த ஆண்டில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Aug 18, 9732 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

