PM Modi on Pahalgam Attack: பயங்கரவாதத்தை வேரறுப்போம் - பிரதமர் மோடி சூளுரை.!

140 கோடி இந்தியர்களின் துக்கத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை தேடி வேட்டையிடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்து இருக்கிறார்.

PM Modi on Pahalgam Attack: பயங்கரவாதத்தை வேரறுப்போம் - பிரதமர் மோடி சூளுரை.!
PM Narendra Modi (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 24, மதுபானி (Bihar News): ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகள், அவர்களை காப்பாற்ற வந்த உள்ளூர் வழிகாட்டி என 28 பேர் பயங்கரவாதிகள் 6 பேர் குழுவால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த விஷயத்தால் இந்தியர்கள் கொந்தளிப்புடன் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், நேற்று மத்திய அமைச்சரவை கூடி பாகிஸ்தானுக்கு எதிராக பல உத்தரவுகளையும் வெளியிட்டது. பாகிஸ்தானை மொத்தமாக முடித்துவிட்ட இந்தியா.. உடனடியாக அமலுக்கு வரும் உத்தரவுகள்.!

பிரதமர் நரேந்திர மோடி உரை:

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், "பயங்கரவாதிகள் நினைத்துப்பார்க்க இயலாத அளவு மிகப்பெரிய அளவிலான தண்டனை அவர்களுக்கு கொடுக்கப்படும். பஹல்கமில் நடந்த துயரால் ஒட்டுமொத்த தேசமும் துயரத்தில் இருக்கிறது. பயங்கரவாதிகளின் கோழைத்தமான தாக்குதலை 140 கோடி இந்தியர்களும் உடைந்துபோயுள்ளனர். இந்த உலகத்துக்கு ஆன் சொல்கிறேன். இந்தியா பயங்கரவாதியையும், அவர்களின் ஆதரவாளர்களையும் கண்டறிந்து தண்டிக்கும். இந்தியாவின் இறையாண்மை பயங்கரவாதத்தால் உடைக்க முடியாதது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உலகநாடுகளின் தலைவர்களுக்கும் நன்றி" என தெரிவித்தார்.

பிரதமர் மோடி சூளுரைத்த காணொளி:

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).