Anant Ambani-Radhika Merchant Wedding: அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் செனா: வாழ்த்து மழை பொழிய குவியும் பிரபலங்கள்.!

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று (ஜூலை 12) தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Anant Ambani-Radhika Merchant Wedding: அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் செனா: வாழ்த்து மழை பொழிய குவியும் பிரபலங்கள்.!
Ambani Son Wedding (Photo Credit: @ANI X)

ஜூலை 12, மும்பை (Mumbai News): இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் (Anant Ambani-Radhika Merchant Wedding) பற்றிய செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. அதன்படி அவர்களது திருமணமானது இன்று (ஜூலை 12) மும்பை ஜான் நகரில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் (Jio World Convention Centre) நடைபெற உள்ளது. இவருடைய திருமணம் காதல் திருமணம். ராதிகாவை பல ஆண்டுகள் காதலித்து இன்று திருமணம் செய்கிறார்.

குவியும் உலக பிரபலங்கள்: இந்த திருமண விழாவில் இந்தியா மற்றும் உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், லாக்ஹீட் மார்ட்டின் CEO ஜேம்ஸ் டெய்க்லெட், அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி உட்பட பலதரப்பட்ட உலகளாவிய பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. Solar and Lunar Eclipses: சூரிய, சந்திர கிரகணம்.. ஏன் நடைபெறுகிறது? அறிவியல் விளக்கம் இதோ..!

அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஹெச்எஸ்பிசி தலைவர் மார்க் டக்கர், ஆரம்கோ சிஇஓ அமீன் நாசர், மோ்கன் ஸ்டான்லி எம்டி மைக்கேல் கிரைம்ஸ், அடோபி சிஇஓ சாந்தனு நாராயண், முபாடலா எம்டி கால்டூன் அல் முபாரக், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ, WWF வீரர், ஹாலிவுட் நடிகர் ஜான் செனா என பல பிரபலங்கள் திருமண நிகழ்வு இடத்திற்கு வந்துவிட்டனர். பிரபல மாடல்களான கர்தாஷியன் சகோதரிகளான கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன் ஆகியோரும் திருமணத்துக்காக வந்துள்ளனர்.

திருமண செலவு: மேலும் இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், நாளை சுப ஆசீர்வாத நாளாகவும், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமண செலவுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, முழு திருமண கொண்டாட்டங்களுக்கு ரூ. 4,000 - 5,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 06:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).