Drug Bust in India: கைதி படத்தை மிஞ்சும் உண்மை சம்பவம்.. இந்தியாவில் முதல் முறை.. 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.. 5 பேர் கைது.!

போதைப்பொருள் ஊடுருவலை தடுக்க சிறப்பு முனைப்புடன் பணியாற்றி வரும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், கப்பற்படையுடன் இணைந்து சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Drug Bust in India: கைதி படத்தை மிஞ்சும் உண்மை சம்பவம்.. இந்தியாவில் முதல் முறை.. 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.. 5 பேர் கைது.!
Drug Bust Gujarat 28-Feb-2023 (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 28, குஜராத் (Gujarat News): இந்தியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்படும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், இந்தியாவில் அதன் விற்பனையை கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் தடுப்பு கட்டுப்பாடு பிரிவு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் முப்படைகளுடன் இணைந்தும் போதைப்பொருள் தடுப்பிரிவு பணியாற்றி வருகிறது.

தமிழரை தேடும் டெல்லி காவல்துறை: சமீபத்தில் டெல்லி மற்றும் புனேவில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் & அரசியல்கட்சி பிரமுகர் ஒருவருக்கும் அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்நிலையில், குஜராத்தில் தற்போது கடலில் கொண்டு வரப்பட்ட 3300 கிலோ அளவிலான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர். New Married Couple Died: திருமணமான 3 மாதத்தில் மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்; புதுமணப்பெண்ணும் தற்கொலை... சோகத்தில் குடும்பத்தினர்.! 

கடத்தல் நடப்பதாக தகவல்: குஜராத் மாநிலத்தை மையமாக வைத்து போதைப்பொருள் டன் கணக்கில் கைமாற்றம் செய்யப்படலாம் என கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைக்கவே, அதிகாரிகள் உச்சகட்ட கண்காணிப்பு நிலையில் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். குஜராத் மாநில எல்லைக்குட்பட்ட, அரபிக்கடலில் சந்தேகத்திற்கு இடமான கப்பல் ஒன்று வந்துள்ளது.

3300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: இதனையடுத்து, இந்திய கப்பற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கப்பலில் அதிரடியாக களமிறங்கி சோதனை நடத்த, கப்பலில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக 3089 கிலோ சாரஸ், 158 கிலோ மெத்தம்பெட்டமின், 25 கிலோ மார்பின் போதைப்பொருட்கள் என 3300 கிலோ கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3300 கிலோ போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ள காரணத்தால், சர்வதேச அளவிலான கும்பலுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடக்கிறது.

(The above story first appeared on LatestLY on Feb 28, 2024 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).