New Married Couple Died: திருமணமான 3 மாதத்தில் மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்; புதுமணப்பெண்ணும் தற்கொலை... சோகத்தில் குடும்பத்தினர்.!
வனஉயிரினங்கள் பூங்காவுக்கு சென்றபோது கணவர் மாரடைப்பால் பலியாக, மனமுடைந்த மனைவி வீட்டின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
பிப்ரவரி 28, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், வைஷாலி, செக்டர் 3 பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அபிஷேக் அலுவாலியா (வயது 25). இவரின் மனைவி அஞ்சலி. தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று முடிந்தது.
மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய தம்பதி: அஞ்சலி அங்குள்ள வடமேற்கு டெல்லியில் இருக்கும் கர்வாலா பகுதியை சேர்ந்தவர் ஆவார். திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் வைஷாலியில் உள்ள அபிஷேக்கின் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர். இருவரும் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர்.
மாரடைப்பால் கணவர் மரணம்: கடந்த திங்கட்கிழமை புதுமண ஜோடி, அங்குள்ள வனஉயிரினங்கள் பூங்காவுக்கு சென்றுள்ளது. இருவரும் அங்கு மகிழ்ச்சியாக வனவிலங்குகளை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்தபோது, திடீரென அபிஷேக் நெஞ்சை பிடித்து சரிந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரின் உயிர் மாரடைப்பால் வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். En Mann En Makkal Yatra: திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பொங்கிய பிரதமர் நரேந்திர மோடி; பல்லடத்தில் பரபரப்பு உரை.. முழு விபரம் இதோ.!
கண்ணீருடன் மனைவி: இந்த தகவலை அறிந்த இருதரப்பு குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அபிஷேக்கின் உடலை வீட்டிற்கும் எடுத்து சென்றனர். அங்கு அபிஷேக்கின் மனைவி அஞ்சலி கணவரின் உடல் அருகே அமர்ந்துகொண்டு கதறியழுதபடி இருந்துள்ளார். அவரை குடும்பத்தினர் தொடர்ந்து மனதை தேற்றும் வகையில் பேசி வந்துள்ளனர். ஆனால் எந்த பலனும் இல்லை.
7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை: ஒருகட்டத்தில் திடீரென அங்கிருந்து எழுந்து ஓடிய அஞ்சலி, 7வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அஞ்சலியை எய்ம்ஸ் மருத்துவமனையில் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Feb 28, 2024 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

