Lorry Bus Crash: லாரி - பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி, அப்பளம்போல நொறுங்கி பயங்கர விபத்து; 6 பேர் பலி., 15 பேர் படுகாயம்.!
இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில், எதிரே வந்த தனியார் பேருந்தின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கியது. இவ்விபத்தில் 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
பிப்ரவரி 10, நெல்லூர் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர், முசுனுர் சுங்கச்சாவடி (Musunuru Toll Plaza) பகுதியில் இன்று அதிகாலை லாரி - பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்கள் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்தோர் சிகிச்சைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர். 2 Shot Dead in Saloon: தலைநகரில் சர்ச்சையாகும் சட்டம்-ஒழுங்கு; சலூனுக்குள் 2 இளைஞர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொலை..!
எதிர்திசையில் வந்த பேருந்து மீது மோதி விபத்து: முதற்கட்ட விசாரணையில், சுங்கச்சாவடிக்கு முன்பு தனியார் பேருந்து எதிர்திசையில் வந்துகொண்டு இருந்தது. அச்சமயம் ஒன்றன் பின் ஒன்றாக என வந்த இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதி, தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அதிகாலை 02:30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. இதனால் லாரி ஓட்டுனர்கள் உறக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது.
தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
#WATCH | Andhra Pradesh | Four dead while 15 people injured after a lorry collided with a bus on Musunuru Toll Plaza, in Nellore District: Kavali DSP Venkataramana pic.twitter.com/MP8ercc92h
— ANI (@ANI) February 10, 2024
(The above story first appeared on LatestLY on Feb 10, 2024 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

