பிப்ரவரி 10, நஜாப்கர் (Delhi Crime News): டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியை சேர்ந்தவர்கள் சோனு, ஆஷிஷ், நீரஜ். இவர்கள் மூவரும் நேற்று அங்குள்ள இந்திரா ஞர் பூங்காவில் இருக்கும் யூனிசெக்ஸ் சலூன் கடையில் முடித்திருத்தம் செய்துகொண்டு இருந்தனர். அச்சமயம் கடைக்குள் வந்த 2 மர்ம நபர்கள், துப்பாக்கியால் ஆஷிஷ் மற்றும் சோனுவை சுட்டுக்கொலை செய்தனர். துப்பாக்கிச்சத்தம் கேட்டு பதறிப்போன கடை ஊழியர்கள் வந்து பார்த்தபோது, இருவரும் உயிருக்கு துடிதுடித்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற குற்றவாளிகள்: நீரஜ் தனது இரண்டு நண்பர்களை விரைந்து அங்கிருந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதி செய்தார். அங்கு இருவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. காவல் துறையினருக்கும் தகவல் தெரியவரவே, அவர்கள் இரண்டு குழுவாக பிரிந்து மருத்துவமனை மற்றும் சலூனில் விசாரணை செய்தனர். குற்றவாளிகள் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. NIA Raid Tamilnadu: கோவை கார் வெடிப்பு சம்பவம்; 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை.!
பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்: இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பலியான ஆஷிஷ் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் 3 குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆஷிஷ் சஞ்சீவ் என்ற நபரிடம் தகராறு செய்து இருக்கிறார். இதனால் சஞ்சீவ் ஆதரவாளர்களால் ஆஷிஷ் மற்றும் சோனு கொலை செய்யப்பட்டனரா? வேறு ஏதேனும் காரணமா? என காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான பதறவைக்கும் காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.
Two people shot dead in a salon in Najafgarh area of Delhi. Incident captured in CCTV.#DelhiNews #najafgarh #delhi #RavindraJadeja pic.twitter.com/gYbVyq679a
— Udit Kumar Singh (@UditKumarSing12) February 9, 2024