Assam Accident: லாரி - பயணிகள் பேருந்து மோதி பயங்கர விபத்து: 12 பேர் பலி., 25 பேர் படுகாயம்.!
அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட்டத்தால் பார்வை குறைபாடு ஏற்பட்டு, பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
ஜனவரி 03, கோல்காட் (Assam News): அசாம் மாநிலத்தில் உள்ள கோல்காட் மாவட்டம், தேர்கோன் பகுதியில் இன்று காலை லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளின் வாகனம்: 50 பேருடன் கமர்பந்தா பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கி போராடியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர். Devarapalli Accident: கார் டயர் வெடித்ததால் அதிர்ச்சி: எதிர்திசையில் புகுந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி., அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
பனிமூட்டத்தால் சோகம்: விசாரணையில், அதிகாலை 4.30 மணியளவில் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. பனிமூட்டம் காரணமாக வாகனம் வருவது தெரியாமல் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
#WATCH | Assam: At least 12 people died and 25 others injured after a bus collided with a truck in Golaghat district. The accident took place at around 5 am in Balijan area near Dergaon in Golaghat: Rajen Singh, Golaghat SP pic.twitter.com/1F9JavLkJh
— ANI (@ANI) January 3, 2024
(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

