Andhra Pradesh Car Collision (Photo Credit: @PTI X)

ஜனவரி 01, தேவாரப்பள்ளி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி மண்டல், பந்தப்புரம் மேம்பாலம் (Andhra Car Accident) அருகே நேற்று பயங்கர விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டயர் வெடித்து சோகம்: தேசிய நெடுஞ்சாலையில், எதிரெதிர் திசைகளில் சென்று கொண்டு இருந்த இரண்டு கார்களில் ஒரு காரின் டயர் திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசைக்குள் புகுந்தது. கார் அதிவேகத்தில் வந்ததால், ஓட்டுநரால் அதனை கட்டுப்படுத்த இயலாத நிலையில், எதிர் திசையில் வந்த வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. Earthquake Alert: இந்தியா, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்: விபரம் உள்ளே.! 

நொடியில் நடந்த விபத்து: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தேவாரப்பள்ளி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

3 பேர் பலி: காவல்துறையினரின் விசாரணையில், விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி பகுதிக்கு சென்று கொண்டு இருந்தவர்களின் காரும், நந்நிகமம் பகுதியிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி பயணித்தவர்கள் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதில், விசாகப்பட்டினம் நோக்கி பயணித்த காரில் ஏழு பேர் பய ணம் செய்துள்ளனர். விபத்தில் சுபாஷ் என்பவரின் தாய், அவரது மனைவி மற்றும் மகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.