Ganpati Bappa Morya By Australian Fan: ஆஸி., அணியின் வெற்றியை கணபதி பாப்பா மோரியா சொல்லி கொண்டாடிய ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்.!

அக்.16 அன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை அணிக்கு இடையேயான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.

Ganpati Bappa Morya By Australian Fan: ஆஸி., அணியின் வெற்றியை கணபதி பாப்பா மோரியா சொல்லி கொண்டாடிய ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்.!
Ganpati Bappa Morya By Australian Fan | Lord Ganpati (Photo Credit: Twitter / Unsplash )

அக்டோபர் 17, லக்னோ (Social Viral): ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடப்பு சீசனில் 14வது ஆட்டம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, எக்னா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 43.3 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியினர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 35.2 ஓவரில் 215 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. Sivakarthikeyan betrayed Imman: டி.இமானுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த சிவகார்த்திகேயன் - மனமுடைந்து கண்களில் நீர்ததும்ப பகீர் பேட்டி.! 

Ganpati Bappa Morya By Australian Fan (Photo Credit: Twitter)

இந்நிலையில், போட்டியை காணுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ரசிகர், "கணபதி பாப்பா மோரியா" என வாசகத்தை உற்சாகத்துடன் உரக்க ஆட்பறிக்க கூச்சலிட்டு மகிழ்ந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் ஆஸி., அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் மார்ஷ் 52 பந்துகளில் 51 ரன்னும், மார்னஸ் 60 பந்துகளில் 40 ரன்னும், ஜோஷ் 59 பந்துகளில் 58 ரன்னும், மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்னும், மார்கஸ் 10 பந்துகளில் 20 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர்.

(The above story first appeared on LatestLY on Oct 17, 2023 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).