Sivakarthikeyan betrayed Imman: டி.இமானுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த சிவகார்த்திகேயன் - மனமுடைந்து கண்களில் நீர்ததும்ப பகீர் பேட்டி.!
D. Imman | Sivakarthikeyan (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 17, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் பல கஷ்டங்களை கடந்து சாதனைகளை படைத்த இசையமைப்பாளர் டி.இமான். ஏ.ஆர் ரஹ்மானுக்கு பின்னர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் திரைத்துறையில் பல காதுகளுக்கு தேனான மெட்டுக்களை வழங்கி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் டி.இமான் (Music Director Imman).

அதேபோல, சின்னத்திரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பின் தொகுப்பாளராக மாறி, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் உதவியுடன் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan).

சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மக்களால் விரும்பி வரவேற்கப்பட்ட வெற்றிக்கூட்டணியாக இருந்தது. மனம்கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தொடங்கிய இவர்களின் வெற்றிப்பயணம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களிலும் தொடர்ந்தது. AUS Vs SL: இலங்கை அணியை அபாரமாக எதிர்கொண்டு, 2 தோல்விகளுக்கு பின் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது ஆஸ்திரேலியா.! 

தற்போது இருவரின் கூட்டணியில் எப்படமும் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பின்னர் ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன், அயலான் என பல படங்கள் வெளியானாலும், இமானின் இசை இடம்பெறவில்லை. 2 பெயர் அறிவிக்கப்படாத படத்திலும் சிவகார்த்தியேன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை வழங்கும் வகையில் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு டி.இமான் கண்கலங்க அளித்த பேட்டியில், "மனம்கொத்தி பறவைக்கான படைப்பேச்சுவார்தை நடந்தபோது, நானும் அவரை நடிக்க வைக்கலாம் என தெரிவித்தேன். அவருக்கு திறமை ஏராளமாக இருக்கிறது. இன்று வரை உழைத்து முன்னேறி வருகிறார். நாங்கள் இனி சேருவது கடினம். Salaar Prithvi Look: மிரட்டலான பிரித்விராஜ் சுகுமாரனின் லுக்.. சலார் படத்தில் பதறவைக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பு.. போஸ்டர் வெளியீடு.!

இது எங்களின் தனிப்பட்ட பிரச்சனை. எதிர்காலத்தில் நாங்கள் சேர வாய்ப்பில்லை. குடும்பம் போல பழகிவிட்டு சிவகார்த்திகேயன் இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு துரோகம் செய்தது தாமதமாகத்தான் எனக்கு உணர்ந்தது. அவரிடம் நான் எனது மனசாட்சிக்கு நியாயமாக கேள்வியும் கேட்டேன்.

அவர் கூறியதை நான் சொல்ல விரும்பவில்லை, இனி நானும் - அவரும் எந்த படத்திலும் இணைந்து பணியாற்றமாட்டோம். அடுத்த ஜென்மத்தில் ஒருவேளை நான் இசையமைப்பாளராகவும், அவர் நடிகராகவும் பிறந்தால் பார்க்கலாம். இந்த ஜென்மத்தில் அதற்கு வாய்ப்பில்லை.

நான் அவரின் துரோகத்தை உணர்த்துக்கொண்டது மிகப்பெரிய காலம் தாழ்த்திய செயல். அதனால் இனி அவருடன் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை. சில விஷயங்களை மூடி மறைக்கிறேன் என்றால், குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமே காரணம். ஊர் என்னை என்ன சொல்லிறது என்பது எனக்கு தேவையில்லை.

என்னை சார்ந்த சமூகத்திற்கும், மக்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் அறம் சார்ந்து நான் சரியாக இருக்கிறேனா, சரியாக வழுக்கிறேனா? என்பது மட்டுமே எனக்கு தெரியும். விபத்துகளை போல துன்பங்கள் வாழ்க்கையில் தொடரும். நமக்கு இது நடந்ததற்கு இவர் மட்டும் காரணம் என்பது இல்லை. இவரும் ஒரு முக்கியமான காரணம். Samsung Galaxy Z Flip5: நாளை இந்தியாவில் விற்பனைக்கு தயாராகிறது சாம்சங் இசட் பிலிப் 5 ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள் இதோ.!

நானும் - அவரும் குடும்பமாக சேர்ந்து பேசியிருக்கிறோம், பழகியுள்ளோம் என்பதால் எனக்கு கடுமையான மனஉளைச்சலை அவை தந்தது. அவரின் மூலமாக நடந்தது ஏற்றுக்கொள்ள இயலாத வலியை கொடுத்தது. நான் எனது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், அனைவரையும் அரவணைத்து வேலை பார்த்து வந்தேன்.

பொதுவெளிகளில் நல்லவர் போல பேசினால், உலகம் அப்படி உள்ளது என்றால் நான் எதற்கும் சொல்வது இல்லை. மனிதர்கள் அனைவரும் போலியானவர்களே, சிலர் கோபம் கொள்வார்கள், வார்த்தைகள் விடுவார்கள், துரோகம் செய்வார்கள், பணமோசடி செய்வார்கள். மன்னிக்கலாம், சில விஷயங்களை மறக்க இயலாது. உடைந்த கண்ணாடி ஒட்ட வாய்ப்பில்லை. எனது கலைக்கு நான் துரோகம் செய்ய இயலாது" என பேசினார்.