Jallikattu (Photo Credit: @PolimerNews X)

ஜனவரி 15, பாலமேடு (Madurai News): தைப்பொங்கல் 2025 பண்டிகை நேற்று முதல் சிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவில் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் அறுவடை திருநாளாகவும், உழவுக்கும்-மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் கதிரவனை போற்றி கொண்டாடப்படும் சூரியப்பொங்கல் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகை நேற்று வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு (Palamedu Jallikattu 2025):

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu) நேற்று மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். குன்னத்தூர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 13 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை உரிமையாளரான பொன்னமவராதியை சேர்ந்த மலையாண்டி பெற்று சென்றார். முதல் பரிசு பெற்ற கார்த்திக்கு கார் வழங்கப்பட்டது. Alanganallur Jallikattu 2025: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!

அதனைத்தொடர்ந்து, இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு (Palamedu Jallikattu Today) போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் துணிச்சலாக காளையின் திமிலை மடக்கி பிடித்த வீரன், "சார் சார்.. ஒரு ஆர்வத்துல புடிச்சிட்டேன்.. விட பயமா இருக்கு.. ஃபிளீஸ் காப்பாத்துங்களே.. " என கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு, "அவ்ளோ பயம் இருக்குள்ள அப்புறம் ஏன்டா புடிச்சா.." என அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

காளையின் திமிலை மடக்கி பிடித்த வீரன்: