Jallikattu Bulls (Photo Credit: Instagram)

ஜனவரி 15, சென்னை (Festival News): “பழையன கழிதலும்,புதியன புகுதலும்” என்று போகிப்பண்டிகை அழைப்பார்கள். அப்படி பழையப் பொருட்களை சுத்தம் செய்து வீடுகளுக்கு வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் பொங்கல் பண்டிகையை (Pongal Festival) கொண்டாடுகிறோம். இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்களுக்கு அறுவடைத் திருநாளாகவும், வருடத்தில் நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் இருந்து கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவாகும். தை மாதத்தின் முதல் நாளில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் மறுநாள், மாட்டுப் பொங்கல் (Mattu Pongal) கொண்டாடப்படுகிறது. இறுதி நாள், காணும் பொங்கல் (Kaanum Pongal) கொண்டாடப்படும்.

மாட்டுப் பொங்கல் (Mattu Pongal):

ஆண்டு முழுவதும் உழவுத் தொழிலுக்கு உற்ற நண்பனாக உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது பட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே மாட்டுப் பொங்கல் என்று பசுக்கள் இணை இறைவனாக நம்பி வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். Jallikattu Bulls: மாடுகளை பாதுகாக்கும் தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு.. ஏன் நாட்டு மாடுகள் அவசியம்? விபரம் உள்ளே.!

ஜல்லிக்கட்டு (Jallikattu):

மாட்டுப் பொங்கலின் சிறப்பே ஜல்லிக்கட்டு தான். அதனை மஞ்சுவிரட்டு என்றும் அழைப்பர். மாட்டுப் பொங்கல் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் உற்சாகமாக நடைபெறும். இதில் பல இளைஞர்கள் கலந்து கொள்வர். குறிப்பாக மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு இவ்விடங்களில் வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டு நடைபெறும். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட இங்கு காண பலர் வருவர். ஜல்லிக்கட்டு விளையாட்டில் வாடி வாசலில் இருந்து சீறிக்கொண்டு பாய்ந்து ஓடிவரும் காளை மாடுகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு பெரிய பரிசு கொடுக்கப்படும். யாராலும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைக்கும் பரிசுகள் கிடைக்கும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Alanganallur Jallikattu):

தைத்திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் திருவிழா போல அவனியாபுரம், பால மேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை ஜனவரி 16-ம் தேதி நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5 ஆயிரத்து 786 காளை உரிமையாளர்களும் 1698 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர். ZEE5 தளத்தில், ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் நேரலையில் மக்கள் காண முடியும் என்று அறிவித்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி வருகிறார். அவர், காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை அமர்ந்து போட்டிகளை ரசிக்கவும், ஒவ்வொரு சுற்றிலும் பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும், காளையை அடக்கும் வீரருக்கும் மோதிரம், தங்க நாணயம் வழங்குகிறார். மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. அலங்காநல்லூர் போட்டியை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வாடிவாசல் அருகே நிரந்தரமாக பிரம்மாண்ட கேலரி அமைக்கப் பட்டுள்ளது.