வானிலை: பலத்த காற்றுடன் 2 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: பலத்த காற்றுடன் 2 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜூலை 03, நுங்கம்பாக்கம் (Weather News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை, எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 38.7° செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 21.5° செல்சியசும் பதிவாகியுள்ளது. ரூ.56,000 சம்பளத்தில் இஸ்ரோவில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க.! 

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 03 முதல் 05 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூலை 06 முதல் ஜூலை 09 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று (ஜூலை 03) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (ஜூலை 04) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று (ஜூலை 03) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் :

இன்று (ஜூலை 03) மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் :

இன்று (ஜூலை 03) மத்திய அரபிக்கடல், வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன் கோவா மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Jul 03, 2025 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).