
ஜூலை 03, சென்னை (Chennai News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 39 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரங்களை பின்வருமாறு பார்க்கலாம். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோ, தன்னாட்சி பெற்ற நிறுவனம் என்பதால் அதற்கான தேர்வு எழுதி நாம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் மத்திய அரசின் ஊதியம் உட்பட அனைத்தும் கிடைக்கும்.
பணியிடங்கள் குறித்த விபரம் :
பொறியாளர் சிவில் (Civil) - 18
எலக்ட்ரிகல் (Electrical) - 10
ரெபிரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங் (Refrigeration & Air-conditioning) - 9
ஆர்க்கிடெக்சர் (Architecture) - 1
சிவில் (Civil) பொறியாளர் தன்னாட்சி அமைப்பு - 1
பணி விபரம் :
கல்வித்தகுதி - B.E / B.Tech படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு - 28 வயதிற்குள்
சம்பளம் - மாதம் ரூ.56,100 முதல்
தேர்வு முறை : எழுத்து தேர்வு & நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் : சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.07.2025
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி : 16.07.2025
விண்ணப்ப கட்டணம் : ரூ.750
கூடுதல் விபரங்களுக்கு : https://www.isro.gov.in/ICRB_Recruitment10.html
விண்ணப்பிக்க : https://apps.ursc.gov.in/ced-2025/advt.jsp