
மே 31, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather ):
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 31-05-2025 முதல் 06-06-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Gold Silver Price: தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை.. வெள்ளி விலை குறைவு.!
சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):
சென்னையில் இன்று (31-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (01-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று 31-05-2025 மற்றும் 01-06-2025 தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழகத்திற்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று 31-05-2025 மற்றும் 01-06-2025 மத்திய- தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று 31-05-2025 மற்றும் 01-06-2025 தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல், வடகிழக்கு அரபிக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,தெற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.