Youngster Atrocity With Bike: சென்னை சாலையில் பைக் வைத்து அட்ராசிட்டி; அதிர்ச்சி வீடியோ வைரல்.. நடவடிக்கை எடுக்க குவியும் கோரிக்கை..!

இளம் தலைமுறை விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி, அதில் செய்யும் சாகசங்கள் சிலநேரம் அவர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் விபரீத விளைவையும் ஏற்படுத்துகிறது.

Youngster Atrocity With Bike: சென்னை சாலையில் பைக் வைத்து அட்ராசிட்டி; அதிர்ச்சி வீடியோ வைரல்.. நடவடிக்கை எடுக்க குவியும் கோரிக்கை..!
Atrocity With Bike & Fire Crackers (Photo Credit: X)

நவம்பர் 09, சென்னை (Social Viral): தலைநகர் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிடுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. லைக், ட்ரெண்ட் போன்ற விஷயங்களுக்காக ஆபத்தான செயல்களை இளைஞர்கள் கையில் எடுக்கின்றனர்.

இதில் இளம் தலைமுறை விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி, அதில் செய்யும் சாகசங்கள் சிலநேரம் அவர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் விபரீத விளைவையும் ஏற்படுத்துகிறது. அதிவேகத்தில் பயணிக்கும் தொழில்முறை பயிற்சி மேற்கொண்ட ரேஸர்களே, வீதிகளில் செல்லும்போது அமைதியாக பயணிக்கின்றனர். Loan Scam Alert: லோன் வாங்காமலேயே ரூ.3000 செலுத்துமாறு மெசேஜ்; மோசடி கும்பல் புது ரூட்.. மக்களே உஷார்.!

ஆனால், பல வீடியோக்களை பார்த்து ஆர்வக்கோளாறுடன் இருசக்கர வாகன இயக்கத்தை கற்றுத்தேறும் இளைஞர்கள், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளப்பக்கங்களில் லைக், வரவேற்புக்காக செய்யும் சாகசங்கள் ஏராளம்.

இதுபோன்ற வீடியோவை பதிவிட்டு பிரபலமான 23 வயது இளைஞர் வைகுந்தவாசன், பல்வேறு புகார்களில் சிக்கி கைது செய்யப்பட்டார். இறுதியாக நடந்த விபத்தால், அவரின் உடலில் காயமும் ஏற்பட்டது. முழு கவசம் அணிந்து பயணிக்கும் வைகுந்தனே, வைகுண்டத்தை அடையாமல் உயிர்தப்பினார்.

ஆனால், அவருக்கு பின் வீடியோ பதிவிடும் பல சாகச இளைஞர்களின் செயல்கள், வைகுந்தவாசனையே மீறும் அளவு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், எக்ஸ் பக்கத்தில் சென்னையில் வசித்து வரும் இளைஞர், தனது TN 14 X 1453 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் பட்டாசை வெடித்ததும், அதிவேகமாக பயணித்த காணொளியும் வெளியாகியுள்ளது. அவரின் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி, சென்னை காவல்துறையை பலரும் டேக் செய்து வருகின்றனர்.

எக்ஸ் பயனரின் பதிவு:

அதிவேக ஆபத்து பயணம்:

(The above story first appeared on LatestLY on Nov 09, 2023 05:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).