Online Loan Scam Alert (Photo Credit: Facebook / Pixabay)

நவம்பர் 09, உளுந்தூர்பேட்டை (Technology News): பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்டால், தற்போதுள்ள தொழில்நுட்ப உலகுக்கேற்ப பலவகை இணையவழி மோசடிகளும் அதிகரித்து விடுகின்றன. இவற்றை கண்காணித்து தடுக்க தமிழ்நாடு சைபர் கிரைம் குற்றத்தடுப்பு காவல்துறையினரும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தீபஒளிப்பண்டிகையை முன்னிட்டு, குறைந்த விலையில் பட்டாசுகள் என்ற பெயரில் மோசடி நடப்பது அம்பலமாகி, அதுதொடர்பாக தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் எச்சரிக்கையும் விடுத்தது இருந்தனர்.

லோன் செயலிகள் தொடர்பான மோசடி முன்பில் இருந்தே மக்களிடம் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தற்கொலை செய்திருக்கின்றனர், ஆபாச மிரட்டல்களை சந்தித்தனர். இந்நிலையில், லோன் ஏதும் வாங்காமலேயே போலியான குறுஞ்செய்தி இணைப்புடன் அனுப்பி மோசடி நடைபெறுகிறது. Air Pollution India: வடஇந்தியாவை மேகம்போல சுற்றிவளைத்த காற்றுமாசு; நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 28) என்பவருக்கு, ரூ.3000 லோன் தொகையை செலுத்த வேண்டும் என அடிக்கடி குறுஞ்செய்தி வந்தவண்ணம் உள்ளது. அவர் சுதாரிப்பாக இவ்வாறான குறுஞ்செய்திகளை அவர் கண்டுகொள்வது இல்லை.

தற்போது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, அதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமிழரசன், மக்கள் இவ்வாறான மோசடி குறுஞ்செய்தியை பெற்றால் உடனடியாக சைபர் கிரைம் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.