Sexual Harassment: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அதிமுக பிரமுகர் போக்ஸோவில் கைது.!

சமீபத்தில் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பொறுப்பைபெற்ற நபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ வழக்கில் கைதாகி இருக்கிறார்.

Sexual Harassment: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அதிமுக பிரமுகர் போக்ஸோவில் கைது.!
Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

அக்டோபர் 31, பட்டுக்கோட்டை (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை (Pattukkottai), பண்ணவயல் கிராமத்தில் வசித்து வருபவர் புஷ்பநாதன். இவரின் மகன் தீபாவின் (வயது 33). இவர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகியாக இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

Rajinikanth on TVK Maanadu: தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி; நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.!  

17 வயது சிறுமி புகார்:

இதனிடையே, இப்பகுதியில் 17 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசுப்பள்ளியில் (Sexually Harassed) 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவருக்கு தீபன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் குறித்து மாணவி தீபனை கண்டித்தும் பலனில்லாததால், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போக்ஸோவில் கைது:

புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தீபனை கைது செய்தனர். பின் அவர் பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).