Wife Killed by Husband: கடல் நீரில் மூழ்கடித்து மனைவி கொலை: சுயஉதவி குழுவில் கடன் வாங்கியதால் கணவன் வெறிச்செயல்.! 7 மாதம் கழித்து அம்பலமானது உண்மை.!
ஆசையாக கடலுக்கு மனைவியை அழைத்துச்சென்ற கணவன், குளிப்பதாக நடித்து தனது மனைவியை கொலை செய்து 7 மாதங்கள் அப்பாவி போல ஊரில் உலாவந்த பயங்கரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 09, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவரின் மனைவி கார்த்திகா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். ராமநாதனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் மகளிர் சுயஉதவி குழுவில் அதிக கடன்கள் வாங்கியது, கணவருக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.
துடிதுடிக்க மனைவி கொலை: இதனால் நாளடைவில் தம்பதிகளிடையே அவ்வப்போது குடும்பத்தகராறு உருவாகி இருக்கிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் தனது மனைவியை அன்போடு அங்குள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு அழைத்துச்சென்ற ராமநாதன், மனைவி குளிக்கும்போது அவரை நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். TN Govt Bus Drivers Strike: தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்: வழக்கம்போல பேருந்துகள் இயங்குவதாக அரசு அறிவிப்பு.!

கணவனின் கபடநாடகம்: பின் மனைவி கடலில் இழுத்து செல்லப்பதாக அலறி, உள்ளூர் மீனவர்கள் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் கார்த்திகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கமும் செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வந்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் அம்பலம்: இதனிடையே, ராமநாதன் தனது மனைவியை கொலை செய்ததாக தகவல் ஒன்று அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, ராமநாதனிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நடத்திய தீவிர விசாரணையில், அதிர்ச்சிதரும் வகையில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, 7 மாதங்களுக்கு பின்னர் ராமநாதனை கடலூர் சத்திரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

